பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

437 சேர்ந்து விடலாம். வசதியாக பஸ்ஸிலும் பிரயாணம் செய்யலாம். எல்லாம் நமக்கு ஒத்துவராது. காலதாமதம் ஆனாலும், பரவாயில்லை கொஞ்சம் வசதியாகவே செல் வோம் என்று தோன்றினால் பேசாமல் மலைமேல் செல் லும் சின்ன ரயிலிலேயே ஏறி உட்கார்ந்து கொள்ளலாம். அது ஆமை வேகத்தில் நகர்ந்து வளைந்து வளைந்து, ஊர்ந்து சென்றாலும் பயணம் வசதியாக இருக்கும். பல இடங்களில் மலையைக் குடைந்து அமைத்திருக்கிறார்கள். கணவாய்கள் வழியாகச் செல்லும். அழகான இயற்கை காட்சிகளும் தென்படும். இடைவழியில் உள்ள பரோக் ஸ்டேஷனில் நல்ல கரம் சாயாவும் கிடைக்கும். அதைக் குடித்து கொஞ்சம் தெம்பு பெற்று மேலும் தொடர்ந்து பிரயாணம் செய்தால் கிட்டத்தட்ட மத்தியானம் இரண்டு. மணிக்கு சிம்லா ஸ்டேஷன் வந்து சேருவோம். ஸ்டேஷனில் இறங்கியதும் எங்கே செல்வது என்பது பிரச்சினை. கொஞ்சம் வசதியானவர்கள் என்றால் பெரிய ஹோட்டல்களுக்கே செல்லலாம். இல்ல்ை என்றால் ஸ்டேஷனிலிருந்து முந்நூறு அடி தள்ளியிருக்கும் பிரதேசத் திற்குச் சென்றால் சவுத் இண்டியன் கிளப் என்று ஒரு கட்டிடம் இருக்கும். ரயில்வே உத்தியோகத்தில் இருந்த தென்னிந்தியர்களால்-ஆம் முக்கியமாகத் தமிழர்களால் கட்டப்பட்ட கட்டிடம் அது. அங்கு அனுமதிபெற்றுத் தங்கலாம். ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. சிம்லா வில் டாக்சிகளோ டோங்காவோ கிடையாது. எல்லோரும் நடராஜாக்களாக மாற வேண்டியதுதான். ஆட்கள் இழுக்கும் ரிக்ஷாக்கள் உண்டு. முன்னே இருந்து இரண்டு. பேர் இழுப்பர் பின்னே இருந்து இரண்டு பேர் தள்ளுவர். கூலியும் அதிகம் கேட்பர். சாமான்களை தூக்குவதற்கு மட்டும் கூலிகள் உண்டு. அவர்கள் முதுகில் எவ்வளவு சாமான்கள் வேண்டுமானாலும் ஏற்றலாம். அத்தனை யையும் சுமந்துக்கொண்டு அநாயாசமாக மலைமேலே ஏறுவர் அவர்கள். நமக்கோ அவர்களோடு நம் உடலைச்