பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 சுமந்து கொண்டு ஏறுவதே சிரமமாக இருக்கும், கொஞ்சம் நின்று நின்று ஒரு மைல் தூரம் ஏறிக் கடந்தால் மால் என்ற பகுதிக்கு வந்து சேருவோம். அதிலிருந்து கூப்பிடு தூரத்திலேயே கிராண்ட்ஹோட்டல்இருக்கிறது. மற்றைய ஹோட்டல்களும் உண்டு. இந்த ஹோட்டல்களில் எல்லாம் சாப்பாடு ஆங்கில மோஸ்தரில்தான் காய்கறிகளை வேக வைத்து அப்படியே தட்டில் கொண்டு வந்து வைத்து விடு வார்கள். உப்பையும் மிளகையும் துரவித்துாவி சாப்பிட வேண்டியதுதான். மாலின் கீழ்க்கோடியில் ஒரு மலையாளி மதராஸி ஹோட்டல் வைத்திருக்கிறார் அங்கு சென்றால் தான் இட்லி சாம்பார், தோசை வடை, எல்லாம் கிடைக்கும். அதிலும் திருப்தி இல்லாவிட்டால் முருங்கைக் காய் சாம்பார் சாப்பிட ஸ்வுத் இண்டியன் கிளப்பிற்கே போகவேண்டியதுதான். சிம்லாவில் குளிர் அதிகம். கடல் மட்டத்திற்கு 7000 அடிக்குமேல் உள்ள பிரதேசம் அல்லவா. அதுவும் வடக்கே ஒதுங்கிய இடம். ஊட்டி குளிர் எல்லாம் சிம்லாகுளிருக்கு உறைபோடக்காணாது. என்றாலும், பகலில் மாலில் சுற்றுவது நாகரீகமாக இராது. மாலையில் நாலுமணிக்கு வெளிக்கிளம்பினால் மாலின் மேற்கு ஒரத்திற்கு வந்து சேர லாம். அந்த இடத்தை ஸ்காண்டல்பாயிண்ட்’ என்று கூறு .கின்றார்கள். அதாவது வம்பளப்போர் கூடும் இடம் என்று தான் பொருள். அதன் பக்கத்தில்தான் பாஞ்சால சிங்கம் லஜபதிராயின் சிலை அமைத்து வைத்திருக்கின்றனர். இது காரணமாக பழைய ஸ்காண்டல் பாயிண்ட் என்ற பெயர் மாறி இன்று லஜபதி ஸ்கொயர்’ என்ற பெயர் வழங்கு கிறது. இங்கிருந்து கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ வாக் பண்ணப்புறப்படலாம். மாலை வேளையில் உல்லன் சட்டை அணிந்து நாலுமைல் போய் வந்தால் உடம்புக்குத் தெம்பாயிருக்கும். உண்ணும் உணவும். ஜீரணிக்கும். வடக்கேயுள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில்தான் அன்னன்டேல், கிளென் என்ற அழகான இடங்கள் இருக்கின்றன. இயற்கை