பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439

யின் வனப்பெல்லாம் திரண்டிருக்கும் இடங்கள் அவை. இங் கெல்லாம் மாலையில் வாக்' போதைவிட காலையிலே புறப்பட்டு நண்பர்களுடன் சென்று அங்கு பிக்னிக்" வைத்துக்கொள்வது நல்லது.

என்ன, மால், அன்னன்டேல், கிளென் என்று சிம்லா வில் உள்ள இடங்களை வர்ணித்துக் கொண்டிருக்கிறீரே. சியாமளா தேவி கோயிலுக்குப்போக வேண்டாமா என்று தானே கேட்கிறீர்கள். அக்கோயில் சிம்லாவிற்குத் தெற்கே மூன்று மைல் தூரத்தில் உள்ள தாரா தேவி என்ற மலைச் சிகரத்தில் இருக்கிறது. அதற்கு நடந்துதானே போக வேண்டும். ஒரு நாள் மாலையை இதற்கென்று ஒதுக்கி நடக்கலாம் போகிற வழியில்தான் ராஷ்டிரபதிபவன் இருக் கிறது. பழைய வைஸ்ராய்கள் மிக மிக அழகாக வைத்திருக் .கிறார்கள். இன்று எல்லாம் மூடிக்கிடக்கிறது. அனுமதி பெற்று உள்ளே நுழைந்து பார்க்கலாம். கட்டிடம் அள்வளவு சிறப்பான கட்டிடம் அல்ல. அதற்கும் மேற்கே இரண்டு மைல் தூரம் சென்று மலை ஏறினால் தாரா தேவி சிக ரத்தை அடையலாம். அங்குதான் ஒரு சிறு கோயில் சதுர மான ஒர் இடத்தில் ஒட்டுக்கூரை வேய்ந்து ஒருசிறு கோயில் கட்டியிருக்கிறார்கள். ஒரே ஒரு அறை. அதுதான் கர்ப்பகிரஹம். அதுதான் அர்த்த மண்டபம், அதுவே மகாமண்டபமும் கூட. இங்கே ஓர் அடி உயரத்தில் ஒரு சிறு கருத்த சிலை. முகத்தைத்தவிர மற்ற பகுதிகள் மூடியிருப்பார்கள். அதுதான் சியாமளாதேவி. என்ன ஏமாற்றம்? இமயத்தின் சிகரத்தில் உலகெலாம் காக்கின்ற அன்னை காளிக்கு அத்தனை சிறிய கோயிலா? ஒரு ராஜ ராஜன் மட்டும் அங்கு சென்றிருந்தால் பெருவுடையாருக்கு அமைத்த பெரிய கோயிலைப் போல் ஒரு பெரிய கோயிலை இந்தப் பிரகதீஸ்வரிக்கு அமையாது இருந்திருப்பானா? அதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? இந்தத் தாராதேவி சியாமளியை வணங்கிவிட்டு நமது இருப்பிடத் திற்குத் திரும்பும்போது, கிராண்ட் ஹோட்டலுக்கு மேல் புறம், சிம்லாவில் உள்ள வங்காள வியாபாரிகள் காளிபாலி"