பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 வாசுதேவனுக்கு மிஞ்சின கடவுள் இல்லை: கங்கைக்கு மிஞ்சின நதியில்லை என்பது ஸ்காந்த புராணம் கூறும் சித்தாந்தம். இதில் கங் காத்துவாரம் என்பது எங்கேயிருக்கிறது என்பது கேள்வி, அது கங்கை நதிபாயும் இடத்திலேதான் இருக்கவேண்டும். அதுவும் இரண்டு மலைகளுக்கு இடையே பாய்ந்து பெருகும் இடத்திலேதான் கங்காத்துவாரம் இருக்க வேண்டும். ஆதலால் கங்கையும், கங்காத்துவாரமும் சேர்ந்திருக்கிற இடம் ஒன்று இருக்கவேண்டும். கங்காத்துவாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுமுன் கங்கையைப்பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? கங்கை என்று நினைத்த வுடனேயே கம்பன் பாடிய கங்கை என்னும் கடவுள் திரு நதி என்ற அடி ஞாபகத்திற்கு வராமல் போகாது. இன்னும் அண்டம் மூடு அறுத்து அந்தரத்து இழிந்து அங்கு அவனியான் அலமரப் பெருகும் மண்டு மாமணி நீர்க்கங்கை என்று திருமங்கை ஆழ்வாரும்பாடி இருக்கிறாரே இப்படி அந்தரத்திழிந்து அவனியான் அலமரப் பெருகும் கங்கை யைக் காசியிலோ கல்கத்தாவிலோ கண்டால் இயலாது, அந்த கங்கையைக் காண்பதற்கு கங்காத் துவாரத்திற்கே செல்ல வேண்டியதுதான் இல்லை. அதற்கும் மேலே மலை ஏறிச் செல்ல வேண்டியதுதான். இமயமலையின் ஒரு சிறு தொடர் சிவலிக் என்னும் மலை, அந்த மலையில் உள்ள ஒரு பிளவுக்கிடையே ஓடி வருகிறது. கங்கை. அந்த இடத் தையே காங்காத்துவாரம் என்று ஸ்காந்தபுராணம் கூறி இருக்கிறது. கங்காத்துவாரம் என்றால் என்ன இடம் என்று