பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

443 வேண்டுமானால் புராணம் படித்த பெரியவர்களுக்கு தெரியலாம். ஆனால் இன்று அது ஹரித்துவார் என்ற பெயரில் தான் விளங்குகிறது. இதில் கூட ஒரு சங்கடம். அது கைலாயத்திற்கு வழிகாட்டும் வாயில் அதனை ஹரித்துவார் என்று சொல்லவேண்டும் என்பர் சைவப்பெரு மக்கள். இல்லை அது பத்ரிநாராயணன் இருக்கும் வைகுண் டத்திற்குசெல்லும் வாயிலாக இருக்கிறது. ஆதலால் ஹரித் துவார் என்றுதான் சொல்ல வேண்டும் என்பர் யூரீவைஷ்ண வர்கள். நமக்கோ சைவ, வைஷ்ணவ வேற்றுமைகள் கிடை யாது. ஆதலால் நாம் நமது ஆங்கிலேய நண்பர்களுடன் சேர்ந்து நடுநிலையில் நின்று ஹரித்துவார் என்றே சொல்லி வருவோம். அந்த ஹரித்துவார் என்னும் கங்காத் துவாரத்திற்கே செல்கின்றோம் நாம் இன்று. ஹரித்துவார் செல்லநாம் டில்லியிலிருந்து ரயிலில் புறப் படலாம். டேராடூன் செல்லும் ரயிலில் ஏறிச்சென்றால் ஹரித்துவார் ஸ்டேஷனிலேயே இறங்கலாம். இல்லை காரிலும் செல்லலாம், பஸ்ஸிலும் செல்லலாம். ஹரித்து வாரை நெருங்கும்போது நல்ல வயல்வெளிகள் தெரியும் பார்த்தால். அவையெல்லாம் தமிழ் நாட்டைப்போலவே இருக்கும். அங்குதான் உயர்தரமான பாசுமதி அரிசி விளை கிறது என்கின்றனர். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு மைல் துரத்தில்தான் கங்கையில் உள்ள ஸ்நான கட்டமான ஹரிகீபைரி என்னும் இடம் இருக்கிறது. அதனை நோக்கி நடந்தும் செல்லலாம் இல்லை டோங்கா வைத்துக் கொண்டும் செல்லலாம். செல்லும் வழியில் நாலு வீதிகள் பிரியும் நாற்சந்தியில் ஒரு தண்ணிர் தொட்டியிருக்கிறது. அதன் நடுவில் சிவபெருமானது பளிங்குக்கற்சிலை ஒன்றிருக் கிறது. இவர் சடாமகுடதாரியாக பத்மாசனத்தில் இருக்கி றார். இவருக்கு ஆறு திருக்கரங்கள் இருக்கின்றன, இரண்டு கைகளில் உருத்திராட்சமாலை இருக்கிறது. தொடையின் மீது வைத்திருக்கும் இரண்டு கைகளில் இரண்டு கலசங்கள் இருக்கின்றன. மற்ற இரண்டு கைகளிலும் கலசம் ஏந்தி அதன் மூலம் தனக்கே கங்காபிஷேகம் செய்த வண்ணமாக