பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 இருக்கிறார். இன்றைய சிற்பி அமைத்த வடிவம்தான் என் றாலும் அழகாக இருக்கிறது. இவனையே மிருத்ஞ்யுசயன் என்கின்றனர். மரணமிலாப் பெ ரு வாழ்வு வாழ. சிவபெருமானும் கங்காபிஷேகம் செய்துக்கொள்ள வேண்டி யிருக்கிறது. இனிநாம் ஹரிகீபைரி என்ற இடத்திற்கே போகலாம். இதுதானே இங்கே முக்கியமான ஸ்நான கட்டம். இக்கட்டம் நன்றாய் அகலமாய் கிட்டத்தட்ட நாற்பது படிகள் கொண்டதாகக்கட்டப்பட்டிருக்கிறது. கிரகணம், கும்பமேளாக்காலங்களில் எண்ணிறந்த பக்தர் கள் இந்த இடத்தில் நீராட வருவார்களாம். அப்போது பலர் இ டி ட ட் டு மிதிபட்டு மாண்டுவிடுவார்களாம். அதனால் நெருக்கமாக இருந்த இந்த ஸ்கான கட்டத்தை விரிவுபடுத்தி நிறையப் படிகட்டுகள் கட்டி வைத்திருக், கிறார்கள். இங்கு கங்கை இரண்டு பிரிவாக ஒடுகிறது. இரண்டிற்கும் மத்தியில் தீவு போல ஒர் இடம் அமைத்து அதில் ஒரு மணிக்கூண்டையும் கட்டியிருக்கிறார்கள். சாதாரணகாலத்தில் இங்கு கங்கை இரண்டு பிரிவாக ஒடு கிறது. இரண்டிற்கும் மத்தியில் தீவு போல இரு இடம். அதில் ஒரு மணிக்கூண்டையும் கட்டியிருக்கிறார்கள். சாதாரண காலத்தில் இங்கு கங்கையில் ஆழம் அதிகம் இராது. ஆதலால் நன்றாக இறங்கி நீராடலாம். நடுத் திட்டுக்கும் போய் வரலாம். கங்கையில் பிரவாகம் வரும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். இந்த ஸ்நான கட்டத்தில்தான் கங்காத்வார ஆலயம் இருக் கிறது. அது பெரிய கோயிலும் அல்ல. உள்ளே இருக்கும் கங்கை அம்மனும் ஏதோ ஒரு பெரிய பொம்மைபோல இருக்கிறதே தவிர வேறு அழகுடையதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஒரு கல்லில் இரண்டு பழங்கள் போல் செதுக்கப் பட்டிருக்கிறது. அதனையே விஷ்ணு பாதம் என்கின்றனர், திரிவிக்கிரமனாக பெருமாள் ஓங்கி உலகளந்து நின்றபோது, பிரம்மா கங்க்ாஜலம் கொண்டே அவரது திருவடிகளைக் கழுவியிருக்கிறார். அப்படி கங்கை நீராடிய விஷ்ணு பர்தமாக அங்கே நிலைத்திருக்கிறது. கங்கையில் நீராடி,