பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 கங்கையம்மனையும் தரிசித்து விஷ்ணுபாதத்தில் விழுந்து வணங்கி எழுந்தால் நமது பழவினைகள் எல்லாம் கழன்றோடிப் போய்விடும் என்பது நம்பிக்கை. இந்த இடத்தையே பிரம்ம குண்டம் என்று அழைக்கின்றனர். இங்குதான் ஒவ்வொரு மாலையும் பெண்கள் அகல் விளக்கு களில் தீபம் ஏற்றி அவைகளைக் கங்கையில் மிதக்கவிட்டு வழிபாடு செய்கின்றனர். இனி நாம் இங்குள்ள மற்ற ஸ்நான கட்டங்களையும் கோயில்களையும் காணப்புறப் படலாம். - - இங்கு கங்கையின் தென்கரையில் சுபாஷ் கட்டம் என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை ஒன்று அமைத்து வைத்திருக்கின்றனர். அதை ஒட்டிய இடத்தில்தான் அங்குள்ள சேவா சமிதிக்கட்டிடம் இருக்கிறது. இதை ஒட்டியே கெளகட், குஷாவர்த்த க ட் ட ம் இருக்கிறது. குஷாவர்த்த கட்டத்தில்தான் தத்தாத்ரேயர் ஆயிரம் வருஷங்கள் தவம் இருந்தார் என்பார்கள். அங்குதான் பிதுர்க்களை நினைத்து கங்கையில் பிண்டமிடுகின்றனர், இன்னும் ஸ்ராவண்நாத் கட்டம், ராமகட்டம், விஷ்ணு கட்டம், பிர்லா கட்டம் கணேஷ் கட்டம் என்று பல கட்டங்கள் இருக்கின்றன. ஹரிகிபைரி என்னும் இடத்திலிருந்து முக்கால் மைல் வடக்கே சென்றால் அங்கு பீமகுண்டம் இருக்கிறது. இது பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனது குதிரை தன் குளம்பால் உதைத்த இடத்தில் ஏற்பட்ட குண்டம் என் கின்றனர். இன்னும் மூன்றுமைல் வடக்கு நோக்கி நடந்தால் சப்தசரோவரம் இருக்கிறது. அன்று வானிலிருந்து பாய்ந்து பெருகிய கங்கையை தன் ஜடாமகுடத்தில் மடக்கி பின் பகீரதன் வேண்டிக்கொண்டபடி ஏழு கூறாகப் பெருக விட்டார் சிவபெருமான் என்பது புராண்க்கதை. அப்படி கங்கை ஏழுகூறாக பெருகி ஓடிய இடமே சப்தசரோவரம். அங்கு இருந்துதான் பல முனிவர்கள் தவம் செய்திருக் கின்றனர் என்று கூறுகின்றனர். அதற்கேற்றாற் போல