பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

449 புதர்களிலிருந்து மூங்கில்கள் ஐந்தாரை வெட்டினான்’ அவைகளை மானைக் கொடியினால் கட்டினான். ஓர் அழகான தெப்பம் அமைந்துவிட்டது. அதில் சீதையையும் ராமனையும் ஏற்றி, அந்தத் தெப்பத்தை தள்ளிக்கொண்டு நீந்தியே அக்கரை கொண்டு சேர்த்துவிட்டான் இலக்குவன். இதனை அழகாகக் கூறுகிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்: வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாண்ையின் கொடியால் ஓங்குதெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரில் உலம்போல் வீங்குதோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப நீங்கினான் அந்த நெடுகதி இருகையால் நீந்தி. என்பது கம்பனது பாடல், என்ன அதிசய சாதனை, என்று அந்தப் பாட்டைப் படித்து வியந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதைவிட ஒரு அரிய சாதனையையே அல்லவா இந்த இலக்குவன் செய்திருக்கிறான். வானில் இருந்த கங்கையைக் கடுந்தவம் புரிந்து பூமிக்குக் கொண்டு வருகிறான் பகீரதன். தவம்புரிந்து உயர்ந்த மாமுனி கொணர்ந்த கங்கை என்றே கங்கை பாராட்டப் பெறுகிறது. அந்தக் கங்கை பூமியில் இறங்கிய உடனே மிக வேகத்தோடே பாய்ந்து பெருகி இருக்கிறது. இந்த இடத்திலே கங்கையை கடக்க வெறும் தெப்பமோ தோணியோ பயன்பட்டிருக்க முடியாது. ஒரு பாலமே கட்டத்தான் வேண்டும். எதற்கும் சளைக்காத இலக்குவன் அப்படியே ஒரு பாலம் கட்டியிருக்கிறான். ஆற்றின் பிரவாகம் செல்லும் பகுதியிலே கால் நாட்டவோ, காங்கிரீட் போட்டு திண்டுகள் கீட்டவோ முடியாது என்பதையும் கண்டிருக்கிறான். ஆற்றின் இருகரையிலும் தான் சுவர் எழுப்ப முடியும். அப்படி எழுப்பிய சுவரின் ஆதரவிலே ஒரு பாலம் ஆம் தொங்குபாலம்தான் அமைக்க