பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5() முடியும். அப்படியே ஊஞ்சல் போல் ஆடும் தொங்கு பாலம் ஒன்றையே கட்டிமுடித்திருக்கிறான். என்னையா? இத்தனையும் உடன் இருந்து பார்த்தவர் போலச் சொல்கிறீரே அப்படியானால் அந்தப் பாலம் எங்கே இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இருக்கிறதே, இன்றுவரை லட்சுமண்ஜுலா என்ற பெயரோடு. லட்சுமண் ஜுலா என்றால் லட்சுமணனால் கட்டப்பட்ட தொட்டில் போன்ற தொங்குபாலம் என்றுதான் பொருள். அந்த லட்சுமண் ஜூலாதான் ஹரித்துவாருக்கு வடக்கே பதினோரு மைல் தூரத்தில் கங்கை மலையிலிருந்து பூமிக்கு. இறங்கிவரும் இடத்தில் இருக்கிறது. அதற்கு மூன்று மைலுக்குத் தெற்கே, ஆம் ஹரித்துவாருக்கு பதினான்கு. மைலுக்கு வடக்கே இருக்கிறது, ரிஷிகேசம் என்னும் தலம். அந்த ரிஷிகேசத்திற்கும், லட்சுமண்ஜுலாவிற்குமே செல் கிறோம் நாம் இன்று. ரிஷிகேசம் செல்வதற்கு டில்லியிலிருந்து டேராடூன் செல்லும் ரயிலில் ஏறவேண்டும். ராய்வாலா என்ற ஸ்டேஷனில் வண்டி மாறவேண்டும். அதைவிட செளவுகரிய மானது "ஹரித்துவார் ஸ்டேஷனிலேயே இறங்கி அங்கிருந்து ரிஷிகேசம் செல்லும் ரோட்டில் வண்டி ஒன்றில் வசதி யாாகச் செல்லலாம். ஹரித்துவாரத்திலிருந்து செல்லும் பஸ்களிலும் செல்லலாம். காரிலிலேயே செல்வதானால் ரிசிகேசம்வரை மட்டுமல்ல, லட்சுமண் ஜூலாவரையே செளவுக்கியமாகச் செல்லலாம். கூடுமானவரை ரோட் நின்றாகவே இருக்கும். ரிஷிகேசம் செல்லும் வழியில் சாங் என்னும் ஆறு வேறே இருக்கிறது. அதில் தண்ணீர் குறைவாகவே ஒடிக் கொண்டிருக்கிறது. அதை கடக்க நல்லபாலம் ஒன்றும் கட்டியிருக்கிறார்கள். அந்த சாங் என்னும் ஆற்றின் தென்கரை வழியாகவே டேராடூன் செல்லும் ரயில் பாதையும் ரோட்டுப் பாதையும் செல்கிறது. நாம் நேரே, ரிஷிகேசம் ஸ்டேஷனிலிருந்து கிழக்கு நோக்கி இரண்டு மூன்று பர்லாங்கு நடந்தால்,