பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

451 அங்குள்ள பிரபலமான திரிவேணி கட்டத்திற்கு வந்து சேருவோம். இது ஹரித்துவாரத்திலுள்ள பிரம்ம குண்டத்தைப் போல புனிதமான கட்டம் ஆனதால், கங்கை யமுனை சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் . கூடு கின்றன என்பர். அதனாலேயே திரிவேணி கட்டம் எனப். பெயர் பெற்றிருக்கிறது. அங்கு கங்கைதான் பிரவகித்து. ஒடுகிறது. அதில் வந்து கலக்கும் மற்றைய நதிகள் எல்லாம்: சின்னஞ்சிறு ஒடைபோலவே இருக்கிறது. அங்கே ஒரு பழைய கோயில் இருக்கிறது. அதைப் பரத்ஜி கோயில் என்கின்றனர். ஆம் நீதியின் நிலையமாக விளங்கிய பரதனுக்கு இந்தப் பாரத கண்டத்தில் பல கோயில்கள் இல்லை. நானறிந்த மட்டில் வடக்கே இந்தக் கோயிலும் தெற்கே கேரளத்தில் இருஞாலக்குடா என்னும் இடத்தில் ஒரு கோயிலும்தான் இருக்கிறது. பரதன் ரிஷிகேசத்தில் இருந்து தவம் செய்த இடத்தில் இந்தக் கோவில் கட்டப் பட்டிருக்கிறதாம். கோயிலும், அது இருக்கின்ற சூழ்நிலையும் ர ம ணி ய ம க இருக்கிறது. சில. மணிநேரம் அங்கே தங்கி இருந்து இளைப்பாறலாம். திரிவேணி கட்டத்திற்குத் தெற்கே முக்கால் மைல் துாரத்தில் முனிகிரெட்டி என்னும் ஓர் இடம் இருக்கிறது. அங்குதான் கங்கைக்கரையில் சிவானந்த மகரிஷியின் ஆஸ்ரமம் இருக்கிறது. அவர் நிர்மானித்த வன சர்வகலா சாலையும், தெய்வநெறிக்கழகமும் அங்கிருந்து அறிவொளி பரப்பிக் கொண்டிருக்கின்றன. காலையும் மாலையும் பஜனைகள் நடக்கின்றன. மேல்நாட்டுப் பெண்களும் ஆண்களும் ஆன்மிகத்துறையில் ஈடுபட இங்கு வந்து தவம் கிடக்கின்றனர். அங்குள்ள ஆசிரமத்தில் எப்போதும் சாப்பாடு போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். வடநாட்டு: யாத்திரையில் ரொட்டியையும், சாயாவையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நமக்கு இங்கு நல்ல அரிசிச் சாதமும் சாம்பாரும், நெய்யும் தாராளமாகக் கிடைக்கிறது, என்றால், அங்கு தங்கி, ஒரு வேளையாவது உணவு அருந்தாமல் திரும்பமுடியுமா? நான் போனபோது சுவாமிஜியவர்கள்