பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 இருந்தார்கள். என்னைத் திருநெல்வேலிக்காரன் என்று அறிந்தபோது, பூர்வாசிரமத்தில் திருநெல்வேலிக்காரராக இருந்த அவர்களுக்கு என் பேரில் அளவிலாத அன்பு ஏற் பட்டு விட்டது. சொல்லப்போனால் அன்று உலகைச் சமன் செய்ய அகத்தியரை சிவபெருமான் தென்திசைநோக்கி பொதிகைமலைக்கு அனுப்பினான் என்பது வரலாறு. இன்று நாமோ தென்திசையிலிருந்து இமயம் நோக்கி ஒரு ஜோதியை அனுப்பி வைத்திருக்கிறோம். இன்று சுவாமிஜி அமரர் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஏற்றிய அமரதீபம் அங்கு சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த முனிகிரெட்டி என்னும் இடத்தில் படகில் ஏறி கங்கையை கடந்து அக்கரை செல்லலாம். அங்குதான் கீதாபவனம், ஸ்வர்க்க ஆசிரமம், பரமார்த்த நிகேதான் என்னும் இடங்கள் எல்லாம் இருக்கின்றன. அப்படிப் படகில் ஏறிக் கொண்டு கங்கையைக் கடக்கும்போது ஜிஸ்தேஷ் மே கங்காபேதி ஹை என்று பாடிக் கொண்டே செல்லலாம். அது ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும். இல்லை இந்தப் படகுப்பயணம் எல்லாம் வேண்டாம் என்றால் சரேல் என்று ரோட்டிற்கு வந்து வடக்கு நோக்கி மூன்றுமைல் செல்ல வேண்டும். ரிஷிகேசத்திற்கு வடக்கே ஒருமைல் தூரத்தில் வழியை அடைத்து ஒரு கம்பைப் போட்டிருப் பார்கள். மே, சூன், சூலை மாதங்களில்தான் அந்தக் கம்பை எடுத்து வைப்பார்கள். பத்ரிநாத், கேதார்நாத் செல்லும் பாதை இங்கிருந்துதானே துவங்குகிறது. இங்கிருந்து பஸ் புறப்படும். அங்கெல்லாம் செல்லுவதற் குரிய காலம் மே, சூன் மாதங்கள்தாம். நான் போனது மே மாதம் ஆதலால் நேரே லட்சுமன் ஜுலா வர்ை காரிலேயே போகமுடிந்தது. லட்சுமன் ஜுலா என்னும் தொங்கு பாலத்திற்கு மேற்கே ஒருபர்லாங்கு தூரத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்துதான் செல்லவேண்டும். - லட்சுமண் ஜூலா என்னும் தொங்கு பாலத்தைப் பார்த்தால் அதிசயத்து நிற்போம். அத்தனை அழகாக