பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453 அந்தப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது இப்போதிருக்கிற, பாலத்தை அந்த இதிகாச காலத்து இலக்குவன் கட்டி யிருத்தல் இயலாது. இத்தனை இரும்பு. கம்பிகளுக்கு எல் லாம் அவன் எங்கு போவான்? அவன் மூங்கிலாலும் மாணைக் கொடியாலும் கட்டி முடித்திருந்ததையே, தற்காலத்திய இஞ்சினியர்கள் அழகாக அவர்கள் கைத். திறன் எல்லாம் காட்டிக் கட்டியிருக்க வேண்டும். கொஞ்ச மும் அஞ்சாமல் அந்த பாலத்தில் மேல் நடந்து கங்கையைக் கடக்கலாம். பாலத்தைக் கடந்து அக்கரை சென்றதும் அங்கு எத்தனையோ சிறு சிறு கட்டடங்கள், அங்கெல்லாம் தனிமையை நாடி ஒடிய தபோதனர்கள் இருக்கிறார்கள்: இந்த கட்டிடங்களுக்கு இடையேதான் ஒரு சிறிய கோயில். அது ரகுநாத்ஜி கோயில் என்பர். எப்போது பரதன் வந்து தவம் செய்துவிட்டானோ, எப்போது லட்சுமணன் ஒரு பாலம் அமைத்து விட்டானோ, அந்த இடத்தைவிட ரகுநாதனான ராமர் வந்து கோயில் கொள்வதற்கு வேறு ஏதாவது தூண்டுதல் வேண்டுமா என்ன? ரகுநாதன் சின்னஞ்சிறிய வடிவினரே. சர்வ அங்க சுந்தரன். அல்லை யாண்டமைந்த அழகன் அவன் என்றெல்லாம் நாம் அவனை காவியம் மூலம் அறிந்திருப்போம். அவ்வளவு அழகனாக இந்த ரகுநாதன் இருக்கமாட்டான். இனி நாம் கங்கையின் அந்தக் கரையிலேயே நடக்கலாம். கிட்டத்தட்ட ஒருமைல் தெற்கு நோக்கி நடந்தால் அங்கு தான் கீதாபவனம் ஸ்வர்க்க ஆசிரமம். பரமார்த்த நிகேதன் முதலிய கட்டிடங்களைப் பார்க்கலாம். இவை களில் கீதாபவனம் பெரியது. மற்றவை எல்லாம் சின்னக் கட்டிடங்களே. எப்போதுமே இரைச்சல் செய்து கொண்டி ருக்கும் மனித சமுதாயத்தை விட்டு ஓடி, தனித்திருந்து பிரார்த்தனை செய்ய விரும்பும் அன்பர்கள் இங்கு ஒரு மாதகாலம் தங்கியிருந்து அமைதி என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்ளலாம். அதற்கெல்லாம் நமக்கு அவ காசம் ஏது, மேலும் அந்த பாக்கியம் எல்லாம் கொடுத்து