பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 வைத்திருக்க வேண்டாமா? ஆதலால் வந்த வழியிலேயே திரும்பிவிடலாம். ரிஷிகேசத்திலிருந்து மேற்கே முப்பது மைல் துரத் திலேதான் டேராடூன் என்ற பெரிய பட்டணம் இருக் கிறது. அங்குதான் உலகப்புகழ் பெற்ற வன ஆராய்ச்சிக் கழகம் இருக்கிறது. மிலிட்டரி கல்லூரி இருக்கிறது. இந்தியப் படங்கள் வரையும் சர்க்கார் சர்வே ஆபீசின் தலைமைக் காரியாலயமும் இருக்கிறது. இன்னும் இந்த டேராடூனிலிருந்து இருபது மைல் தூரத்தில் முசோரி என்னும் மலைவாசஸ்தலமும் இருக்கிறது. உடலில் தெம்பும், பையில் பணமும், நிறைய அவகாசமும் உள்ள வர்கள் இங்கெல்லாம் சென்று வரலாம்.