பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மண்டபத்தின் முகப்பில் ஒரு நந்தி இறைவனை நோக் காமல், நம்மை எதிர்கொண்டழைப்பதுபோல் பிரதான சந்நிதிக்கு கொஞ்சம் வடக்குப் பக்கமாய் இருக்கும். அதனை அலங்கார நந்தி என்கின்றனர். பெயருக்கு ஏற்ப நல்ல அழகான நந்தி. கருங்கல்லில் செய்தது. இந்த நந்தி யைத் தொழுதுவிட்டு நந்தியின் தென்பக்கமாகத் திரும்பி கோயிலின் தெற்குப்பிரகாரத்தில் நடக்கலாம். அங்கெல் லாம் சிறு சிறு கூடங்கள். ஒவ்வொரு கூடங்களிலும் மூன்று மூன்று விக்கிரகங்கள், அறுபத்து மூன்று நாயன்மாரையும் மற்றைய தேவர்களையும் அங்கே பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்கள். எல்லோரையும் ந | த ர் நாதர் என்றே அழைக்கிறார்கள். இந்தப்பிரகாரத்திலேயே, இக் கோயிலைப் புதுப்பித்த மும்முடி கிருஷ்ண தேவராயர் தன் மனைவியர் நால்வருடன் எழுந்தருளியிருக்கிறார். அந்த மண்டபத்திற்கு எதிரேதான் அவர் பிரதிஷ்டை செய்த தண்டபாணி நிற்கிறார். இந்தத் தண்டபாணியின் வடிவில் ஒரு விசேஷம். அவர் தலையின் மேலே ஐந்து தலை நாகம் ஒன்று குடையாக விரிந்து நிற்கிறது. எட்டியிருந்து பார்த் தால் கண்ணன் வடிவுபோலவே இருக்கிறார். அருகில் போய்ப் பார்த்தால்தான் அது தண்டபாணியாம் முருகன் வடிவ என்று தெரியும். அவர் காலடியில் உள்ள பீடத் திலுமே மும்முடி கிருஷ்ண தேவராயாது வடிவம் செதுக் கப்பட்டிருப்பதையும் காணலாம். இந்தத் தண்டபாணியை தரிசித்த பின் மேலே நடந்தால் கன்னி மூலையில் வடக்கு நோக்கியவராய் ஒரு விநாயகர் இருக்கிறார். இவரைப் பிரசன்னகணபதி என்கிறார்கள். நல்ல காத்திரமான வடிவம் இவர் வெண்ணெய், சந்தனம் எல்லாம் சாற்றிக் கொண்டிருப்பார். மேல்ப் பிரகாரத்திலே பல லிங்க வடிவங்கள், அவர்களில் மு. க் கி ய மா ன வ ர் க ள் சகஸ்ரலிங்கர், முருனேஸ்வரர் பாதாளேஸ்வரர், தீர்த் தேஸ்வரர் அ. க் ரே ஸ் வ ரர் என்பவர்களே. இவர் களையும் வணங்கி விட்டு வடக்குப் பிரகாரத்தையும் கடந்து அர்த்தமண்டபத்திற்கு வரலாம். அங்கிருந்து