பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தொண்டைமானுடைய தமிழைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லே. உணர்ந்ததை உணர்ந்தபடி எல்லாம் தமிழில் எடுத்துக் கூறும் சித்து அவருக்குக் கை வந்திருக்கிறது. கல்கி, கிருஷ்ணமூர்த்திக்குப் பின் தமிழை இப்படி சுகமாகக் கையாளுபவர் தொண்டைமான்தான் என்று இன்று பல அன்பர்கள் கருதுகிறார்கள். அவருடைய தமிழ்நடை முதலிலிருந்து கடைசி வரை துள்ளி விளையாடிக் கொண்டே செல்கிறது. பம்முவதும் பாய்ச்சல் காட்டுவதும், கர்ணங்கள் போடுவதும், ஹாஸ்யங்களை உதிர்ப்பதும், பக்தி வெள்ளத்தில், வாசகர்களே முக்கி முக்கி எடுப்பதுமாக இந்த பாஸ்கரத் தமிழ் செய்கிற ஜால வித்தைகள் பலப்பல. ஜஸ்டிஸ். எஸ். மகராஜன்