பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஆலயம் இருக்கிறது. தமிழ் நாட்டில் பரசுராமன் ஆலயம் நிரம்பவும் அபூர்வம்தானே. ஆதலால் அந்த கோவிலுக்குச் சென்று பரசுராமரையும் வணங்கியே திரும்பலாம். பரசு ராமன் நிரம்பக் கோபக்காரர் ஆச்சே, அதனால் அவரை வணங்காமல் திரும்பி விடக்கூடாதுதான். இக்கோயில் லிங்கம் கட்டிகள் என்ற வீர சைவர்களால் பராமரிக்கப் படுகிறது. இங்கு ஒரு பெரிய மந்திரத் தகடு ஸ்தாபனமா யிருக்கிறது என்கிறார்கள். இத்தலத்தில் ராகவேந்திர சுவாமிகளால் நிர்மாணிக்கப் பட்ட மாதவர்கள் மடம் ஒன்றிருக்கிறது. இந்த மடம் பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்டு இன்று வரை மடாதிபதிகள் இருந்து வருகிறார்கள். துவைத தத்து வத்தை விளக்கவும் அரிய நூல்கள் பல இவர்கள் எழுதி யிருக்கிறார்கள். இங்குள்ள செப்பேடு, ஒன்று 1580ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மாதவர் களது குரு விஜயேந்திரர், தஞ்சை அப்பயதிஷிதர், காஞ்சி புரத்து வைஷ்ணவ மதாச்சாரியான தத்தாச்சாரியார் மூவரும் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்பநாயக்கர் சபையில் தங்கள் தங்கள் மதாச்சாரத்தைக் குறித்து தர்க் கித்தனர் என்று தெரிகிறது. வெற்றி யாருக்கும் கிடைத்தத தோ? நமக்கேன்அந்த விசாரனை எல்லாம்? நாம் நஞ்சுண்ட கண்டனை வணங்கி அருள் பெற்ற மன நிறைவோடேயே திரும்பலாம்.