பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மைசூர் சாமுண்டி

சிருமை என்று ஒரு மிருகம், மந்தம், மடமைசோம்பல், அறிவின்மை, எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மிருகம் அது. ஆனால் அந்த மிருகத்தை நான் பார்க்கிறபோதெல்லாம் அதன் குணாதிசயத்தைக் கண்டு அதிசயித்து நிற்பதுண்டு. எவ்வளவோ காலமாக யோகம் செய்தும் அதனால் ஒரு சித்தி கைவரப் பெற்ற தத்துவ ஞானியாகவே அது எனக்கு காட்சி அளிக்கிறது. தன் பக்கத் தில் என்ன என்ன நடந்தாலும் அதில் எல்லாம் மனதைச் சிதறவிடாமல் அவைகளை ஒதுக்கித் தள்ளி தன் மனத்தை ஒருநிலையிலே வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெறுவது என்றால் அது எளிதான சித்தியா என்ன? உலகம் எக்கேடு கெட்டாலும் அதனால் எல்லாம் அதன் உள்ளம் சலனம்