பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அடைவதில்லையே, சிலசமயங்களில் உள்ளத்தை எங் கேயோ பரவ விட்டு விட்டு நின்றுவிட்டால் அதனை யாரா வது அசைக்க முடியுமா என்ன? எத்தனை வண்டிகள். எத்தனை கார்கள் எல்லாம் ஹார்ன் அடித்துத்தான் பார்க்கட்டுமே அதன் சமாதி கலையுமா என்ன? ஆனால் அந்தச் சமாதி கலைந்து ஆனந்த அனுபவத்தையே பெற்று விட்டால் அதுபோதும், கும்மாளத்திற்கு குறைவுண்டா? துள்ளி ஓட ஆரம்பித்துவிட்டால் அதனைக் கட்டமுடியுமா, இல்லை கட்டிப் பிடிக்கத்தான் முடியுமா? இன்னும் அது குரல் எழுப்பி விட்டால் அந்த இன்னிசையில் அது பெறுகிற ஆனந்த அனுபவம் இருக்கிறதே அது ஒரு தனி வகை. தன்னை மறந்த லயந்தினில் வாழும் கவிஞனாக அல்லவா மாறிவிடுகிறது. இன்னும் தனக்கு என வாழாது பிறருக்காகவே வாழும் பிராணி அது. மக்களுக்கு வேண்டி யதை எல்லாம் நிஷ்காம்ய நிலையில் நின்று உதவும் அருமை யான கர்மயோகியாக அல்லவா அது வாழுகிறது. இந்த உலகத்தின்சந்தடி இரைச்சல் எல்லாம் அதனை ஒன்றும் செய்வதியில்லையே. இப்படி ஒர் அருமையான விமரிசனம் எருமையைப்பற்றி. இந்த விமரிசனம் என் சொந்தச் சரக் கல்ல. பேராசிரியர் பெர்னாட்ஷா எழுதும் விமரிசனம் தான் இவ்வளவு, அற்புதமான பண்பாடுடைய மிருகம் எருமைப் பசுவே ஒழிய எருமைக்கடா அல்ல. எருமைக் கடா சுமக்க முடியாதபாரத்தை ஏற்றினாலும் வண்டியை ஆடாமல் அசங்காமல் இழுத்துச் செல்லும் வலியுடையது. அதனாலேதான், அது நமது பழங்காலத்திய ஜீப் காராக இருந்திருக்கிறது. இன்று அதனை பிரேக் இன்ஸ்பெக்டர் என்றும் குறிப்பிட்டு அதன் சக்தியை கொஞ்சம் குறைவா கவே மதிக்கிறோம். இப்படி எருமைப் பசுவையும் எருமைக்கடாவையும் போற்றி புகழ்பவர் உண்டு என்றாலும் அந்தப் பழைய புராண காலத்திலே மந்தம், சோம்பேறித்தனம், அறி யாமை எல்லாவற்றையும் உருவகப்படுத்த எருமையைத்