பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 உள்ளே சென்றால் ஒரு திறந்த வெளிப்பிரகாரம் இருக்கும். அதனையும் கடந்து மேல் நடந்தால் மகா மண்டபம் வத்து சேருவோம். அந்த மகா மண்டபத்திலிருந்தே சாமுண் டேஸ்வரியைத் தரிசனம் செய்யவேண்டும். நான் முன்னரே குறித்தபடி சாமுண்டேஸ்வரி, மஹிஷாசுர மர்த்தனியின் வடிவினளே. விஷ்ணு தர்மோத்ரத்தில் இந்த தேவியின் வர்ணனைகள் விளக்கமாக இருக்கிறது. தங்கமயமான மேனியும், இளமையும் உடையவளாய், சிம்மத்தின் பேரிலே உக்கிரமாக அவள் காட்சி தருவாள். இருபது கைகள் கொண்ட இந்த ஈஸ்வரி சூலம், கட்கம், சங்கு, சக்கரம் கேடயம் பரசு முதலிய ஆயுதங்களை ஏந்திய வளாய் இருப்பாள். காலின் கீழ், எருமை உடலும், அசுரத் தலையும் கொண்ட மஹிஷன் விழிபிதுங்கிக்கொண்டிருப் பான். அவனைத் தன்கையில் ஏந்திய திருகுலத்தால் அழுத் திப்பிடித்துக்கொண்டிருப்பாள், என்றெல்லாம் இவள் வடிவ வர்ணனை செய்யப்பட்டிருக்கிறது. இத்தனை வர்ணனையும் சரியாய் இருக்கிறதா என்று நாம் தெரிந்து கொள்ள முடியாது. நாம் எட்ட இருந்துதானே அம்பி கையைத் தரிசிக்க முடிகிறது. தங்கக் க வ ச ம் சாற்றி கோலாகலமாக விளக்குகள் எல்லாம் போட்டு அலங்கரிப் பார்கள். இந்த சாமுண்டேஸ்வரிதான் மைசூர் மகாராஜாக் களின் குலதெய்வம். மிகவும் பழமையான கோயிலாக இருந்ததை 1827-ல் மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் புதுப்பித்திருக்கிறார். அழகான தங்கச் சிம்மவாகனம் ஒன் றையும் செய்து வைத்திருக்கின்றார். ஏராளமான நகை களையும் செய்து அன்னைக்கு அணிவித்து மகிழ்ந்திருக் கிறார். அதில் எண்பது சமஸ்கிருத தோத்திரங்கள் பொறிக் கப்பட்ட தங்க நட்சத்திர மாலிகை மிகவும் விலை உயர்ந்த தாம். இந்தச் சாமுண்டியை ஏதோ உடையார் வம்ச அரச பரம்பரையினர் மட்டுமே வணங்கி வந்தார்கள் என் றில்லை. மைசூரை ஆண்ட ஹைதர் அலியும், அவன் மகன் திப்புசுல்தானுமே ஆராதித்திருக்கிறார்கள். அவர்களின் ஆட்சியில் ஆண்டுதோறும் புதுப்புது அணிகளை செய்து 感*33一岛