பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$42 அனுப்பிக்கொண்டேஇருந்திருக்கின்றார்கள். அந்தநகைகள் எல்லாம் இன்னும் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு தேவிக்கு அணியப்படுகின்றன என்கிறார்கள். சாமுண்டேஸ்வரி விருத்தியான தெய்வம். ஆம். மடமையையும், சோம் பரையும் தொலைத்து அருள்புரியும் ஆற்றல் உடையவள் அல்லவா அவள். இந்தச் சாமுண்டிமலையிலே, சாமுண்டி கோயிலுக்குத் தென் புறம் ஒரு பழைய கோவில் இருக்கிறது. அங்கு கோயில் கொண்டிருப்பவர் மகாபலேஸ்வரர் என்னும் சிவ மூர்த்தியும். இக்கோயிலை 1128-ல் ஹோய்சல மன்னன் விஷ்ணு வர்த்தனன் கட்டினான், என்றும் பின்னர் சந்திர கிரியில் இருந்து அரசாண்ட விஜயநகர நாயக்கர் மன்னன் 1620-ல் விரிவாக்கினார் என்றும் சரித்திர ஏடுகள் கூறு கின்றன. சாமுண்டிமலையில் ஏறுவதற்கு மாலை நேரமே உகந்த நேரம். சாமுண்டேஸ்வரியையும் இரவிலே விளக் கொளியிலே கண்டு வணங்குவது தான் சிறப்பாக இருக்கும். அந்த இரவிலே அந்த மலைமேலே நின்று மின் விளக்கு களால் பிரகாசிக்கும் மைசூர் நகரைக் காண்பதும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். மைசூர் நகரிலே, சாமுண்டேஸ்வரியை தரிசித்தபின் பார்க்க வேண்டியவைகள் எவ்வளவோ உண்டு என்றாலும் மைசூர் மகாராஜாவின் அரண்மனையைப் பார்க்காமல் ஊர் திரும்புதல் கூடாது. இது ஒரு பெரிய அரண்மனை. இந்த அரண்மனையின் நீளம் 145-அடி உயரம். இந்த மாளிகையை பல வர்ணக் கற்களால் கட்டி இருக்கிறார்கள். இக் கட்டிடம் கட்ட பதினான்கு வருஷம் ஆயிற்று என்றால் அதன் விஸ்தாரத்தைப்பற்றி அதிகம் விவரிப்பானேன். இந்த அரண்மனையினை மின்விளக்குகளால் அலங்கரித் திருக்கிறார்கள். இந்த மின்விளக்கு அலங்காரத்தை காண வேண்டும், என்றால் நவராத்திரி, தசரா காலத்தில் காணச் செல்ல வேண்டும். பத்து நாட்களும் விளக்கு அலங்காரம்