பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 மேட்டிலும், நடந்து அலுத்ததெல்லாம் ஞாபகத்துக்கு வரு கிறது. உடனே, கேள்விக்குரிய விடையையுமே கேள்வி வடிவிலேயே சீரங்கநாதரிடமே போட்டு விடை கேட்கப் பார்க்கிறார், மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே வழிநடந்த இளைப்போ துரசில்லா குகன் ஒடத்திலே கங்கைத்துறை கடந்த இளைப்போ tசுரமாம் சித்ர கூடச் சிகரக் கல்மிசை கடந்த இளைப்போ காசினிமேல் மாரீசன் ஓடிய கதி தொடர்ந்த இளைப்போ? என்றெல்லாம் அடுக்கடுக்காய்க் கேள்வி கேட்டவர் மேலும் தொடர்ந்து, - ஓடிக்களைத்தோ-தேவியைத் தேடி இளைத்தோ நீர்பள்ளிகொண்டீர் என்று கேட்டுக்கொண்டே போகிரு.ர். இந்தப் பாட்டை நான் படித்தபோது உண்மையிலேயே இவைதானா காரணமாக இருக்கும் சீரங்கநாதர் பள்ளி கொண்டிருப்பதற்கு என்று எண்ணினேன் . இவைதான் காரணமென்றால் இராவணவதம் முடித்து பட்டாபிஷேக மும் செய்து கொண்டபின்பு, அயோத்தி அரண்மனையிலே அம்ஸ் துளிகா மஞ்சத்திலே அமர்ந்து நித்திரை செய்யலா மே? அதைவிட்டு, ஆம்பல் பூத்து அசையும் பருவதமடுவிலே அவதரித்த இரண்டாற்றின் நடுவிலேதானா வந்து படுத்துக் கிடக்கவேண்டும். இதற்கு ஒவ்வொரு தலத்திலும் ஒவ் வொரு கதை சொல்கிறார்கள். அன்று பட்டாபிஷேகம் முடிந்ததும் ராமர் தான் ஆராதித்து வந்த அரங்கநாதனை விபிஷணனுக்குக் கொடுக்க, அவன் அவரை இலங்கைக்கு எடுத்துச்செல்ல, வழியில் திருச்சியை அடுத்த சீரங்கத்திலே காவிரிக்கரையிலே வைக்க அந்த இடத்தின் அழகைக்கண்டு