பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அதை விட்டுப்பிரிய மனம் இல்லாதவராய் அங்கே காலை நீட்டிப் படுத்துக்கொண்டார் என்பர் ஒருசாரர். இல்லை பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்குமே ஒரு பிணக்கு; அது காரண மாக பிரம்மா செய்ய விரும்பிய வேள்வியை அழிக்க சரஸ் வதியே ஒரு பெரிய ஆறாகப் பெருக்கெடுத்து வரும்போது, பிரம்மா செய்த பிரார்த்தனையின்படி, அவரது தந்தை யாம் விஷ்ணு ஆற்றின் குறுக்கே படுத்து ஆற்றின் வெள்ளத் தைத் தடுத்தார். என்பர் ஒருசாரர். முந்திய கதை பூரீரங்கம் என்னும் தலத்தை சேர்ந்தது என்றால் பிந்தியது உத்தரங்கம் என்னும் பள்ளி கொண்டானை சோந்தது. இன்னொரு கார ண மு. ம் இருந்திருக்கிறது என்று இப்போது தெரிகிறது. அகலிகையின் கணவ ரான கெளதமர் தம் பர்ண சாலையைக் காவிரிக் கரையிலே அமைத்திருக்கிறார். ஒருநாள் காவிரி நீர்பெருக்கிலே அந்தப்பர்ணசாலை அழிந்து விடும்போல் இருந்திருக்கிறது. அப்போது கெளதமர் தன்னையும் தன் பர்ணசாலையையும் காக்கும்படி பரந்தாமனைக் கூவியழைத்திருக்கிறார். பரந்தாமனுக்குத்தான் பழைய அனுபவம் இருக்கிறதே! மண்ணையெல்லாம் வெட்டிப்போட்டு உடைப்பை அடைப் பதை விட குறுக்கே படுத்து வெள்ளத்தை தடுத்து விடலாம் கெளதமரின் பர்ண சாலையைக் காத்துவிடலாம் என்று தோன்றியிருக்கிறது. சரிஎன்று காவிரிநதியின் குறுக்கே படுத்து விடுகிறார். நதியும் இருகூறாகப் பிரிந்து சென்றுவிடு கிறது. கெளமதர் குடிலும் காப்பாற்றப்படுகிறது. இதனா லேயே அந்த இடம் கெளதமச் rேத்திரம் என்று அழைக் கப்படுகிறது. அரங்கநாதன் பள்ளிக்கொண்ட இடத்தைச் சுற்றி ஒரு பட்டணமே தோன்றுகிறது. அதனால் அந்த நகரம் சீரங்கப் பட்டணம் என்றே பெயர் பெறுகிறது. அந்த சீரங்கப்பட்டணத்திற்கே செல்கிறோம் நாம் இன்று. சீரங்கப்பட்டிணம், மைசூர் பங்களுர் .ெ ப. ரு ம் பாதையில் மைசூருக்கு வடகிழக்கே மைசூரிலிருந்து பத்து