பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 இந்தக் கோயில் மைசூர் அரச பரம்பரை சரித்திரத் திலே முக்கிய இடம் பெற்றிருக்கிறது. 1574-ல் நான்காம் சாமராஜ உடையார் இக்கோயிலில் பூசை செய்து கொண் டிருக்கும் போது விஜயநகர ராஜப்பிரதிநிதியே அவரைக் கைது செய்ய முயன்றதாகவும் சீரங்கநாதர் அருளால் உடையார் தப்பித்துச் சென்றதாகவும், வரலாறு கூறு கிறது. 1610-ல் விஜய நகர மன்னனின் ராஜப்பிரதிநிதி யிடமிருந்து ராஜ உடையார் கோட்டையை கைப்பற்றி யிருக்கிறார். பின்னர் ஹைதர் அலி படை எடுத்தபோது 1761-ல் இம்மன்னன் கிருஷ்ணராஜ உடையார், அவரது மனைவியார் மந்திரி ஆகிய மூவரும் பூரீரங்கநாதரை வணங்கிவிட்டு ஹைதரை எதிர்த்ததாகவும் தெரிகிறது, என்றாலும் ஹைதரேவெற்றிபெற்றிருக்கிறார். கோட்டை அவன் வசமாயிருக்கிறது. 1773-ல் கோயிலில் ஒரு வெடி விபத்து நேர்ந்திருக்கிறது. அதனால் சேதமுற்ற பகுதிகளை எல்லாம் ஹைதர் அலியே திரும்பவும் கொடுத்திருக்கிறார். திப்பு சுல்தான் பல கோயில்களை இடித்தார் என்பர். ஆனால் அவர் இந்த சீரங்கநாதர் கோயிலைத் தொடவே இல்லை. மேலும் பல அணிமணிகளையும் சீரங்கநாதருக்கு. வழங்கியிருக்கிறார். இப்படி முரட்டு முகம்மதிய மன் னனையும் அடிமை கொள்ளும் திறம்படைத்தவராக, இருந்திருக்கிறார் இந்தச் சீரங்கநாதர். இச் சீரங்கப்பட்டிணத்தில் இந்த ரங்கநாதர் கோயி லைத் தவிர இன்னும் சில கோயில்கள் இருக்கின்றன. ஒன்று கங்காதரேஸ்வரர் கோயில் மற்றொன்று நரசிம்மர் கோயில், கங்காதேஸ்வரர் கோயில் உத்சவர் தக்கதிணா முர்த்தியாக இருக்கிறார். நல்ல அழகான வடிவம். இந்த, இரண்டு கோயில்கள் தவிர, அம்பேகல் கிருஷ்ணன் கோயில் என்று ஒரு சிறு கோயிலும் உண்டு. அங்கு தவழும் வடிவில் கிருஷ்ணன் இருக்கிறார். இந்தக் கோயிலைச் சுற்றி இடிந்த மண்சுவர்கள் இருக்கின்றன. அவை முன்பே அங் கிருந்த அரண்மனைக் கட்டிடங்களின் பகுதி என்கின்றனர்.