பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சீரங்கநாதர் கோயிலில் இரண்டு உத்சவங்கள் சிறப் பானவை ஒன்று தை மாதம் நடக்கும் ரதோத்ஸவம், மற் றொன்று ஐப்பசியில் நடக்கும் பிருந்தாவனோத்சவம், இரண்டு உத்சவகாலங்களிலும் மக்கள் திரளாகக் கூடுகின் றனா. சீரங்கப்பட்டிணத்தை விட்டுக்கிளம்புமுன், கோட் டைக்கு கீழ்புரம் உள்ள லால்பாக் தோட்டம் சென்று அதனை அடுத்துள்ள தாரியாதெளலத் என்னும் வசந்த மண்டபத்தையும் பார்த்து விடலாம். தாரியா தெளலத் ஒர் அழகான கட்டிடம்-சிறந்த வேலைப்பாடுள்ள துரண் களும் விதானங்களும் அமைந்தது. சுவரில் எல்லாம் சித் திரங்கள், சித்திரங்கள் எல்லாம் எத்தனை எத்தனையோ கதைகளைக் கூறும். இந்த வசந்த மாளிகை ஒரு பெரிய அரண்மனையாகவே இருக்கும். இன்று இந்த அரண்மனை யைச் சுற்றிலும் தட்டிகள் அடித்து அதன் அழகைக் கெடுத்து வைத்திருக்கின்றனர் புதைபொருள் ஆராய்ச்சி இலாகா வினர். கேட்டால் அடிக்கும் காற்றிலும் வெய்யிலிலும் சித் திரங்கள் மங்குகின்றன. அதனால் தான் இந்தப் பாதுகாப்பு என்கிறார்கள். இந்த பாதுகாப்பு இல்லாத காலத்தில் எடுத்த படமே நேயர்களுக்கு காட்சி அளிக்கிறது. தாரியா தெளலத்திற்கு தென்பக்கம் நாலு பர்லாங்கு நடந்தால் அங்கு ஹைதர் அலி, அரண்மனை, திப்பு சுல்தான் முதலிய வர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதிக்கட்டிடங் களைக் காணலாம். மன்னாதி மன்னர்களும் இப்படி மண்ணோடு மண்ணாகத்தானே போய்விடுகிறார்கள் என்ற வேதாந்தத்தை நாமும் உணர்ந்து ஊர்திரும்பலாம்.