பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அமைத்து விடவேண்டும் என்று ஒரு ஆங்கிலேய அதிகாரி எண்ணினான், என்ற கதை ஞாபகத்திற்கு வரும். அழகுணர்ச்சி நிறைந்த ஆங்கிலேயன் ஆசையில் தவ றொன்றும் இல்லையே. ஆனால் அவன் எண்ணிய எண்ணம் -ஈடேறவில்லை. காரணம் அவன் தேவர்களைப் போன்ற அதிசய சக்தி உடையவனாக இல்லாதிருந்ததுதான். அழகிய கோயிலை தேவர் உலகிற்கு எடுத்து செல்ல விரும்புகிறார்கள் தேவர்கள். உடனே கோயிலுக்கே முளைக்கிறது இறக்கை, இரண்டு. கோயில் அஸ்திவாரத் தினையே பெயர்த்து வான வீதியிலே மிதந்து செல்லப் புறப்பட்டு விடுகிறது. கோயில் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த சிற்பி ஜக்கனாச்சாரி ஆபத்தை உணர் கிறார். குறையே இல்லாததினால் அல்லவா இந்த தேவர்கள் இக்கோயிலை வானுலகுக்கு எடுத்துச் செல்ல நினைத்துவிட்டனர். ஒரு குறையை உண்டாக்கி விடலாம். அவர்களுக்கு இந்த ஆசை போய்விடும் குறைவுள்ள கோயில் வானவீதியில் செல்ல இயலாது பூமியிலேயே தங்கிவிடும் அல்லவா? என்று எண்ணுகிறார். தன் சிற்றுளி யால் மூலமூர்த்தியாம் கேசவனது வடிவிலேயே ஒரு ஊனத்தை உண்டாக்கி விடுகிறார். அது காரணமாக வான வீதியில் பறந்த கோயில் திரும்பவும் பூமிக்கு இறங்கி வருகிறது. இறங்கி வரும்போது முன்னிருந்த இடத்தில் இறங்காமல் கொஞ்சம் விலகியே இறங்குகிறது. அதனால் மதிலுக்கு வெளியே இருந்த கருடகம்பம் வாயிலுக்கு நேரே அமையவில்லை. இப்படி கருட கம்பம் விலகி இருக்கும் கோயில்தான். சோமநாதபுரத்துக் கேசவன் கோயில். இந்த சோமநாதபுரத்துக் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று. சோமநாதபுரம் மைசூருக்குக் கிழக்கே இருப்பத்தி - ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. கோவை மாவட்டத் திலிருந்து மைசூர் ராஜ்யத்தோடு சேர்ந்திருக்கும் கொள்ளேகாலை நோக்கிச் செல்லும் பாதையில்