பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இருக்கும். எல்லாம் நின்ற திருக்கோலங்களே. திரிபங்க நிலைகளை எல்லாம் காண இயலாது. எல்லா வடிவங் களுக்கும் நான்கு திருக்கரங்களும், தலையில் கிரீடமும் சாதாரணமாய் அணியும் அணிகளும் இருக்கும். அங்கு சக்கரம், கதை பத்மம் ஏந்தும் முறைகளிலேதான் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.இதன் விவரம் எல்லாம் ரூபமந்தனமும் பத்ம புராணமும் விரிவாய்க் கூறும், நான் விவரிக்க விரும்பவில்லை. இந்த சோமநாதபுரத்து கோவிலுள்ள ஜனார்த் தனனும் கோபாலனுமே அழகு வாய்ந்தவர்கள். கேசவன் என்று இன்று இருப்பவன் பின்னாலே செய்யப்பட்டவ னாகத்தான் தெரிகிறான். அவ்வளவு அழகுடையவனாகவும் காணோம். ஆம் ஜக்கன்னாச்சாரி என்ற சிற்பி அன்று இக் கோயிலை வானுலகம் செல்லாது தடுப்பதற்கு முதலில் கேசவன் திருவுருவத்திலேயே ஊனத்தை உண்டாக்கியிருக் கிறார். ஊனம் உடைய உருவை பூஜையில் வைக்கக்கூடாது என்பதற்காக அதனை அகற்றிப் பின்னர் புதிய கேசவனை செய்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கேசவனைச் செய்த சிற்பி அந்தப் பிரபல ஜக்கன்னாச்சாரியாக இருத்தல் முடியாது. இந்தக் கோயிலில் கோயில் கொண்டிருக்கும் ஒவ்வொரு மூர்த்தி முன்பும் ஒரு நவரங்க மண்டபம் இருக் கிறது. இந்தக் கோயிலின் பிரதான வாயிலின் முகப்பில் லட்சுமி நாராயணனும், வேணுகோபாலனும் தனியே இருக் கிறார்கள். இக்கோயிலில் ஒரு விசேஷம், இன்னின்ன மூர்த்தியை இன்னின்ன சிற்பிகள் செய்து அமைத்துள் ளார்கள் என்ற விவரமும் ஒவ்வொரு மூர்த்தியின் அடிப் பீடத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது. சரித்திர ஆராய்ச்சிக் காரர்களுக்கு இது மிக்க உபகாரமாக இருக்கும்தானே. கோயிலையும் மூர்த்திகளையும் பார்த்தப்பின் வெளியே வரவே மனமிருக்காது. அத்தனை அழகு நிறைந்த கோயில் அது. அதனால் தானே ஹொய்சல மன்னர்கள் கட்டிய கோயில்களில் எல்லாம் சிறப்புடையது இதுவே என்று பெர்குசன் குறிப்பிடுகிறார்.