பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முதலிய சாஸ்திரங்களைக் கற்றிருந்தன என்றும் தெரிகிறது. இக்கோயிலைக் கட்டிய சோமநாதன் சகலகலா வல்ல வனாக இருந்திருக்கின்றான். அவனைப் பற்றி, அவன் புகழைப் பற்றி எல்லாம் விரிவாகவே கல்வெட்டுக்கள் பேசுகின்றன. மந்திரிகளில் அவர் ஒரு மாணிக்கம் என்றும் அரசியலில் அவன் ஒரு சாணக்கியன் என்றும் வியாபாரத். தில் அவர் ஒரு யுகாந்தரன் என்றும் புகழப்பட்டிருக் கிறான். இத்தனை புகழுக்கும் உரியவன் கேசவனுக்கு ஒர் ஆலயம் எடுத்து இன்னும் தன் புகழை பெருக்கிக் கொண் டிருக்கிறான். இந்தக் கேசவன் ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்பட்டவன் இல்லை. ஆழ்வார்கள் காலத். திற்கெல்லாம் பின்னால் உருவானவன் அல்லவா? என்றாலும், அழகிய மணவாளதாஸன் என்னும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், திருவரங்கக் கலம்பகம் பாடும் போது, கேசவனை நினைக்கிறார். - கேசவனையே செவிகள் கேட்க: திரு அரங்கத்து ஈசனையே சென்னி இறைஞ்சிடுக;-நேசமுடன் கண்ணனையே காண்க இரு கண், இணர்கொள் காயாம்பூ வண்ணனையே வாழ்த்துக என் வாய் ! என்று அருமையான பாடல் ஒன்றும் பாடி இருக்கின்றார். ஆதலால் நாமும் கேசவன் புகழைக் கேட்டு அவன் வண்ணத்தை வாழ்த்திக் கொண்டே திரும்பலாம்.