பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இந்தியா சுதந்திரம் பெற்ற போது, மகம்மதியர்கள் பிரிந்து பாகிஸ்தான் என்று ஒரு தனி ராஜ்யம் ஸ்தாபித்துக் கொண்டார்கள் என்கிறார்கள். ஆனால் சமய உலகிலே, கலை உலகிலே இந்த இந்து முஸ்லிம் வேற்றுமை இல்லாதிருந்திருக்கிறது என்று அறிகிறபோது அது எவ்வளவோ மகிழ்ச்சி தரத்தானே செய்யும். விந்திய மலைக்கு வடக்கே இந்த இந்து முஸ்லிம் வேற்றுமை பல முறைகளில் வளர்ந்திருந்தாலும், விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பிரதேசத்தில் இந்துக்களும் முஸ்லீம் சகோதரர்களும் யாதொரு வேற்றுமையும் இல்லாமல் ஒன்றாக வளர்ந்திருக்கிறார்கள். அதிலும் மைசூர் பிர தேசத்தில் ஆட்சி புரிந்த ஹைதர் திப்புசுல்தான் முதலிய மகம்மதிய அரசர்கள் இந்துக் கோயில்களுக்கு பல நிவந்தங் கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மூர்த்தி நாயுடு பல ஆபரணங்கள் பரிசளித்திருக்கிறார்கள். நஞ்சன்கோடு, சாமுண்டி மலை, பூரீரங்கப்பட்டினம் முதலிய தலங்களில் உள்ள மூர்த்திகளுக்குப் பல ஆபரணங்களைப் பரிசளித் திருக்கிறார்கள். நஞ்சன்கோடு, சாமுண்டிமலை, சீரங்கப் பட்டினம் முதலிய தலங்களில் உள்ள மூர்த்திகளுக்கு அவர்கள் அளித்த பரிசுகளைப் பற்றிதான் முன்னமேயே தெரிந்து கொண்டிருக்கிருேம், இதையெல்லாம்விட சுவை யான வரலாறு ஒன்றும் நமக்கு கிடைக்கிறது. ஆம் அது தான் டில்லியில் இருந்து அரசாண்ட சுல்தானின் மகள் ஒருத்தி, நாராயண மூர்த்தியிடம் காதல் கொண்டு வாழ்ந் திருந்தாள் என்று கதை வருகிறது. தென்னிந்தியக் கோயில்களில் நுழைந்து அங்குள்ள பொருட்களை எல்லாம் முகம்மதிய மன்னர்கள் கொள்ளையடித்துச் சென்ற போது, ஒரு சிறு ஊரில் உள்ள நாராயணனின் விக்கிரகம் ஒன்றையும் எடுத்துச் செல்கிறார்கள். ஆனால் அந்த மூர்த்தியின் அழகில் மயங்கி, டில்லி சுல்தானின் மகள் அதைத் தன் அந்தப் புரத்துக்கே எடுத்து செல்கிறாள். அதனுடன் கொஞ்சி விளையாடுகிறாள். தன் காதலையே அதற்கு அர்ப்பணிக்கிறாள். இப்படிப் பலநாள் கழிகிறது.