பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சோழ நாட்டைவிட்டு, மைசூர் ராஜ்யத்திற்குச் சென்ற ராமானுஜர் அங்கு வைணவத்தைப் பரப்புகிறபோது, அக்கோயிலில் உள்ள மூர்த்தி டில்லிசுல்தானின் அரண் மனைக்குச் சென்றுவிட்டார் என்பதை அறிகிறார். அன்பர் பலரையும் கூட்டிக் கொண்டு டில்லி செல்கிறார். சுல்தா னிடம் பேசுகிறார். பல பொருட்களை மீட்டு வருகிறார். அப்படி மீட்டு வந்த பொருட்களில் சுல்தானின் மகளது அந்தப்புரத்தில் இருந்த நாராயணனுமே வந்து விடுகிறார். யதாஸ் தானத்திற்கு. சுல்தானின் மகள் தான் காதலித்த மூர்த்தி போய்விட்டது என்று அறிந்ததும் அந்த மூர்த்தி யைத் தேடினாள். தேடிக்கொண்டு தெற்கேயே வரு கிறாள். அம்மூர்த்தி கோயில் கொண்டிருக்கும் கோயி லுக்கே வந்து சேருகிறாள். அம்மூர்த்தியின் திருவடியி லேயே விழுந்து வணங்குகிறாள். அம்மூர்த்தியும் அவளை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார். இந்த மூர்த்தி யைத் தான் ராமானுஜர் செல்வப்பிள்ளை என்று அழைத்தி ருக்கிறார். சுல்தானியர் பெயர் எம்மகு(ஆம் மம்மது என்ற பெயரின் திரிபுதான்) என்றும், கல்தானின் மகள் பெயர் வரதநந்தினி என்றும் கர்ண பரம்பரைக் கூறுகிறது. இந்த செல்வப்பிள்ளை கோயில் கொண்டிருக்கும் தலம் தான் மேல்கோட்டை என்றும் திருநாராயணபுரம். அந்த திரு நாராயணன் புரத்துக்கே செல்கிறோம் நாம் இன்று. இந்த மேல்கோட்டைக்கு ரயிலில் செல்ல விரும்புகிற வர்கள் பங்களுர் மைசூர் ரயில் பாதையில் உள்ள பாண்டவ: புரம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும். அங்கிருந்து இருபது மைல் வடக்கு நோக்கிச் செல்லவேண்டும். இல்லையென் றால் மைசூரிலிருந்து பூரீரங்கப்பட்டணம் வழியாக நீலமங்கலா செல்லும் பாதையில் பஸ்ஸிலே போய் இறங்கி, கொஞ்ச தூரம் நடக்கவேண்டும். இந்த ரோட்டில் போகும் போதே மலைமேல் ஒரு கோபுரம் தெரியும் அது தான் மேல் கோட்டையின் பிரதான கோயில் என்று மயங்குவோம். அது பிரதான கோயில் அல்ல. மலை அடிவாரத்திலேதான் பிரதான கோயில் இருக்கிறது.