பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மைசூரிலிருந்து டாக்சி, அல்லது காரில் சென்ருல், நேரே கோயில் வாசலிலேயே போய் இறங்கலாம். ஆளுல் கோயில் வாயிலை அடுத்து இருக்கும் கீழ வீதியில் மைசூர் மகாராஜாவின் கார்களைத் தவிர மற்றக் கார்களை அனு மதிக்க மாட்டார்கள். ஆகையால் கொஞ்சம் அப்பிரதட் சணமாகவே வடக்கு வீதி, மேற்கு வீதி, தெற்கு வீதி கடந்து கீழ வீதிக்கு வந்து கோயில் வாசல் வரவேண்டும். கோயில் கிழக்கே பார்த்த கோயில். கோயில் வாயிலை பெரிய கோபுரம் ஒன்றும் அழகு செய்யாது. கோபுரம் என்று சொல்லவே லாயக்கற்ற ஒரு சிறு கோபுரம் தான் அங்கிருக்கும். ஒன்று மட்டும் அதிசயமாக இருக்கும். அங்குள்ள அர்ச்சகர்கள் எல்லாம் நல்ல தமிழ் நாட்டு அர்ச்சகர்களாகத்தான் இருப்பார்கள் அவர்களுக்கும் அந்தப் பிரதேச மொழியான கன்னடத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. எல்லோரும் பூரீரங்கத்து வைஷ்ண வர்களாகவே இருப்பதால் தமிழர்களாகிய நம்மைக் கண் டதும் ஆவலோடு வரவேற்பார்கள். தமிழிலேயே பேசி மகிழ்வார்கள். நம்மையும் மகிழ்விப்பார்கள், கோயில் நிரம்பப் பெரிய கோயிலும் அல்ல. சின்னக் கோயிலும் அல்ல. நடுத்தரமான கோயில். அங்குள்ள மண்டபங்களை எல்லாம் கடந்து சென்று மூலவரான திரு நாராயணனைக் காண்போம். சங்கு சக்கரம் ஏந்திய கையனாய் கண்களை அகலவிரித்து கொண்டு கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டு நிற்பான் அவன். தலையை நீண்டுயர்ந்த கிரீடம் ஒன்று அணி செய்யும். வலது கரம் அபய முத்திரையோடு இருக்கும். இடது கை தாழ்ந்து கதையை ஏந்தியிருக்கும். பொன்னும் மணியும் வைத்து இழைத்த ஆபரணங்களைப் பூண்டு கம்பீரமாக காட்சி தருவான். அரையில் உடுத்தி யிருக்கும் பட்டை விரித்துப் பக்கவாட்டிலே கட்டியிருப் பார். வலது அபயகரத்தையும் திருவடிகளையும் தங்க கவசம் அணி செய்யும். சேர்த்து வைத்திருக்கும் இரண்டு திருவடிகளுக்கும் இடையே ஒரு பெண்ணின் முகம் தோன்றும். அவள்தான் டில்லி சுல்தானின் மகளான