பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருநாரணன், செல்வப்பிள்ளையை எல்லாம் வணங்கிய பின் கோயிலை வலம் வந்து வடக்குப் பிரகாரம் வந்தால் அங்கே ஒரு பெரிய முன் மண்டபத்துடன் கூடிய கோயில் இருக்கும். அதுதான் தாயார் சந்நதி, அந்த மண்டபத் தினை தூண்களில் எல்லாம் சிற்ப வேலைகள் நிறைந்ததாக இருக்கும் இந்தத் தனிக்கோயில் தாயாரையும் வணங்கி வெளிவந்த பின் பக்கத்தில் உள்ள மலைமீது ஏறுவோம். மலை ஏறுவதற்கு படிகள் இருந்தாலும், அவை செங்குத் தாய் இருப்பதால் ஏறுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். மலை உயரம் எல்லாம் அவ்வளவு அதிகம் இல்லைதான். மலைமேல் ஏறும்போது பாதி வழியில் வீர அனுமாருக்கு ஒரு கோயில் இருக்கிறது. மலை உச்சியில் கோயில் கொண்டிருப்பவர்தான் யோக நரசிம்மர். அவரது கோயில் கோபுரமே, நாம் அந்த ஊரை அணுகும்போது மலைமேல் தெரிந்த கோபுரம். வீர அனுமாரையும் யோக நரசிம்மரை யும் தரிசித்து வணங்கிவிட்டு திரும்பலாம். இத் தலத்தை தகதினபத்ரிகாச்சிரமம் என்பர். அதற். கேற்ப இக்கோயிலில், தலவிருட்சமாக இருப்பது இலந்தை மரமே. பத்ரி என்றால் இலந்தை என்றுதானே பொருள்: இக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் எல்லாம் சிறப்பானது வைரமுடி சேவைதான். இத்தலத்தில் உள்ள செல்வப் பிள்ளை ராயன் என்னும் சம்பத்குமாரனுக்கு நல்ல அழகிய வைரம் இழைத்த மகுடம் ஒன்றிருக்கிறது. அது துவாரகையிலிருந்து ஆண்ட கிருஷ்ண பரமாத்மாவே செய்து அளித்தது என்கின்றனர். அந்த வைரமுடி இன்று இருப்பது மைசூர் அரசர்களின் கஜானாவில். அதை அங்கு ஆண்டுக்கொருமுறை மைசூரிலிருந்து கோலாகலமான விருதுகளுடன் கொண்டுவருவர். அதை செல்வம் பிள்ளையாருக்கு அணிவித்து அவரை எழுந்தருளப் பண்ணுவர். இந்த வைரமுடி சேவையைக் &#ff" GðĞ;" பதினாயிரக் கணக்கான மக்கள் இன்றும் கூடுகின்றனர். இந்த வைரமுடி அணிந்து உலாவரும் செல்வப்பிள்ளையின் திரு உரு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.