பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 இம் மேல்கோட்டை திருநாராயணன் கோயிலைப் ப ற் றி ய வரலாறுகள் அனந்தம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழ அரசர் குலோத்துங்கன் வைணவர் களைக் கொடுமைப் படுத்தியபோது ராமானுஜர் தமிழ் நாட்டைவிட்டு ஓடி இங்கு வந்து சேர்ந்திருக்கிறார். அப்போது அவரது கனவில் திருநாரணன் தோன்றி தனக்கு ஒரு கோயில் கட்டிக்கொடுக்க வேண்டி இருக்கிறார். அதன்படியே காடாக இருந்த இடத்தையெல்லாம் வெட்டி எடுத்து கோயில் கட்டியிருக்கிறார், மேல்க் கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள தொண்டனுாரில் பதினாறு வருஷகாலம் இந்த திருப்பணியை இருந்து முடித்திருக்கிறார். இந்த திருநாராயணன் புதையுண்டு கிடந்த இடத்திலே இருந்த வெள்ளைச் சுண்ணமே வைணவர்களது திருமண் காப்பிற். குப் பிறகு உதவியிருக்கிறது. திரிபுண்டரத்தையும் பூர் சூர்ணத்துடன் பூரீவைஷ்ணவர்கள் தரிக்கும் பழக்கம் அன்றே ஏற்பட்டிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டில் துவார சமுத்திரத்தை பாழ்படுத்திய முகம்மதியர்கள் இவ்வூருக்கும் வந்திருக் கிறார்கள். கோயிலை இடித்திருக்கிறார்கள். 1614-ம் ஆண்டிலிருந்து இக்கோயிலின் மேற்பார்வை மைசூர் அரசர்களிடம் வந்திருக்கிறது. அதன் பின்தான் இக் கோயில் செல்வப் பெருக்குடன் விளங்கியிருக்கிறது. 1785ல் எழுதப்பட்டுள்ள சிலாசாசனம் ஒன்றின் மூலம், திப்புசுல்தான் இக்கோயிலுக்கு யானைகளை வெகுமதியாக அளித்திருக்கின்றான் என்று தெரிகிறது. மைசூர் சமஸ்தானத்தை 1578-முதல் 1617-வரை ஆண்டவர் ராஜ உடையார். இவர் திரு. நாராயணனிடம் அத்யந்த பக்தி உடையவர். அவர் திரு. நாராயணனுக்கு நவரத்தின மயமான கிரீடம் ஒன்றை அளித்திருக்கிறார். செல்வப் பிள்ளைக்கு அணிவிக்கும் வைரமுடியைப் போலவே, இதனையும் ராஜமுடி என்றே அழைக்கிருர்கள். 1842-ல் கிருஷ்ணராஜ உடையார் மனைவியான ராணியார்