பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பரதன் பெளதானபுரத்தில் தம்பிக்கு-அதாவது துறவிக்கு சிலை அமைத்து வணங்கியிருக்கிறார். நாளடைவில் அந்தச் சிலை புதர் மண்டி இருந்த இடம் தெரியாமலேயே போயிருக்கிறது. பின்னர் மைசூரை ஆண்ட சாமுண்ட ராயன் என்னும் அரசன், கோமதேஸ்வரனது தியாகம், துறவு எல்லாவற்றையும் கேள்விப்பட்டு அவனுக்கு ஒரு சிலை அமைக்க எண்ணியிருக்கிறார். ஏதோ பூமியின் தளத்திலே சிலை அமைத்தால்தானே புதர் மண்டும். மலையின் உச்சியிலேயே அமைத்து விட்டால் அதற்கு அழிவேது என்று கருதியவனாய், இந்திரகிரி என்னும் மலைச் சிகரத்திலேயே மலையையே வெட்டிச் சரிசெய்து கோமதேஸ்வரனை ஓர் அற்புதமான சிலையாகச் செய்து, நிறுத்தியிருக்கிறார். இதுதான் இன்றிருக்கும் கோமதேஸ் வரரது சிலையின் கதை. இந்த கோமதேஸ்வரர் இப்படி உருவானது 978-ம் வருடத்தில்-ஆம். தமிழ் நாட்டில் ராஜராஜசோழன் பெரிய கோயிலைக் கட்டி பெரு உடையாரை ஸ்தாபித்தானே ஏறக்குறைய அதே காலத்தில்தான். இக்கோமதேஸ்வரர் இன்னும் இரண்டி டங்களில் சிலை வடிவம் பெற்றிருக்கிறார், இவரும் தென் கன்னடம் ஜில்லாவில் கர்க்கலா என்ற இடத்திலும் என்னுரர் என்ற இடத்திலும் நிற்கின்றன. இவைகளில் கர்க்கலாவில் நிற்பது 45 அடி உயரம் உடையது. என்னுரி லிருப்பது 35 அடி உயரம் மட்டுமே உடையது. ஆனால் சிரவண பெலகோலாவில் உருவாகியிருப்பது58 அடி உயரத் தில்-ஆதலால் இந்தச் சிலையே மிக உயர்வானது என்பர், கலைஞர்கள், இதுவே சிறப்பானது என்பர் சமணர்கள். இத்தனை விஷயமும் தெரிந்து கொண்டபின் நேரே இத். தலத்திற்குச் செல்லுவது நல்லது. காரில் சென்றால் நாம் முதலில் ஊருக்கு மத்தியில் உள்ள குளக்கரை சென்று சேரலாம். இதனையே கல்யாணி குளம் என்றழைக்கின்றனர். இக்குளத்தை சுற்றி நல்ல படிக்கட்டுகள் கட்டி வைத்திருக்கிறார்கள். வடபுறம் ஒரு மண்டபமும் அமைத்திருக்கிறார்கள். அம்மண்டபத்தில்