பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 உள்ள தூண்களில் இக்குளத்தை வெட்டியவர் சிக்கதேவ ராஜேந்திரன் என்றும் பொறித்து வைத்திருக்கிறார்கள். இக்குளத்திற்கு வடபுறம் இருப்பது சந்திரகிரி. தென்புறம் இருப்பது இந்திரகிரி. நாம் காண வந்திருப்பது கோமதேஸ் வரரை. அவர் இருப்பது இந்திரகிரியில். இந்த மலை, அடி வாரத்திலிருந்து 470 அடி உயரம் இருக்கிறது. இதன் குறுக் களவு கால் மைல் இருக்கும். இனி மலை ஏறவேண்டியது தான். மலையில் படிகள் வெட்டியிருக்கிறார்கள். சுமார் 500 படி ஏறினால்தான் கோமதேஸ்வரரைக் காணமுடியும். ஒரேயொரு எச்சரிக்கை. மலையில் வழியில் மண்டபங்கள் ஒன்றும் கிடையாது. ஆதலால் காலை 9 மணிக்குள் ஏறி 10 மணிக்குள் திரும்பி விடவேண்டும். இல்லாவிட்டால் பாறையில் அடிக்கும் வெயிலில் காலை வைத்து ஏறவே முடி யாது. மலை அடிவாரத்தில் பிரமதேவருக்கு ஒரு கோயில் இருக்கிறது. இவரை ஜருகம்பே அப்பா என்கின்றனர். மலையின் உச்சியில் கோட்டை போல ஒரு சுவர் எழுப்பி யிருக்கிறார்கள். அந்தக் கோட்டைச் சுவர்க்குள்ளே தான் சில கோயில்கள் இருக்கின்றன. முதலில் நாம் சென்று சேர்வது சவுசதீர்த்தங்காபஸ்திக்குதான். அது ஒரு சிறு கோயில். கருவறையில் இருபத்தொரு தீர்த்தங்கரரது வடிவங்கள், உட்கார்ந்திருக்கும் பாவனையில் செதுக்கப் பட்டிருக்கின்றன. இக்கோயிலுக்கு மேற்கே இருப்பது சென்னானபஸ்தி இங்கு கோயில் கொண்டிருப்பவர் ஆதிநாதர். இவரது கோயில் வாயிலிலே மானஸ்தம்பம் ஒன்று நிற்கிறது. இதன் பக்கத்திலே இருப்பது ஒடேகல்பஸ்தி. இதனையே திரிகூட பஸ்தி என்கின்றனர். இங்கு மூன்று கருவறைகள் இருக்கின்றன. இது ஹொய்சல மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும். இங்கு கோயில் கொண்டிருப்பவர் ஆதிநாதர், நேமிநாதர், ரிஷபநாதர் என்பவர்கள். இவர்களில் ஆதிநாதர் என்பவர்தான் பூருதேவர். அவர்தான் கோமதேஸ்வரரின் தந்தை. இனி தான் கோமதேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இடத் திற்கு படியேறிச் செல்ல வேண்டும் கோயில் வாயிலில் 2738ー5