பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தியாகட பிர்ம தேவர் தூண் ஒன்றிருக்கிறது. இதனைத் தளிர்க் கொடிகள் சுற்றியிருப்பது போல் அமைத்திருக் கிறார்கள். கலை அழகு நிரம்பிய தூண் இது, இந்தத் துணை சுற்றிக் கொண்டு கோயில் வாயிலாம் அகண்ட துவாரத்தில் நுழைந்து மேற்செல்ல வேண்டும், கோயில் வாயிலில் மேற்கு நோக்கியவண்ணம் ஒரு சித்தரும் இதற்கு எதிர்த்திசையில் குல்ல கயாஜி என்ற பெண்ணின் வடிவமும் இருக்கிறது. இந்த குல்ல கயாஜி என்ற பெண்தான் ஒரு குடுவையில் பால் கொண்டு வந்து கோமதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்திருக்கிறாள். அந்தப் பாலே! பெரிய குளமாகப் பெருகியிருக்கிறது. இவர்களை எல்லாம் வணங்கிவிட்டே உள்பிரகாரம் செல்ல வேண்டும். அங்கு தான் வானம் மணி முகடாய், 58 அடி உயரத்தில் கோமதேஸ்வரர் நிற்கிறார். அன்று மண்ணை அளக்க மால் வளர்ந்து நின்றான் என்று திரிவிக்கிரமனை நினைத் திருக்கிறோம். அந்தத் திரிவிக்கிரமன் வடிவம் எல்லாம் சிறிய வடிவமாகவே இருக்கப் பார்த்திருக்கிறோம். இங்கே வானுற நிமிர்ந்து நிற்கும் கோமதேஸ்வரரைப் பார்த்த பின்தான் எப்படித் திருவிக்கிரமன் வளர்ந்திருப்பான் என்று கற்பனை செய்து கொள்ளத் தோன்றும். உயரத் திற்கு ஏற்ற மார்பு, 24 அடி அகலம், அன்று வாணர் குலத்து வீரன் ஒருவனைப் பற்றி புலவன் ஒருவன் பாடினான். பேரரசர் தேவிமார் பெற்ற மழலையர்தம் மார்பகலம கண்டு மகிழ்வரே-போர்புரிய வல்லான் அகளங்கன் வாணன் திருநாமம்; எல்லாம் எழுதலாம் என்று இதைப்போல் நாமும் இந்த கோமதேஸ்வரனது மார்பகலம் கண்டு மகிழலாம். இந்த அற்புதச் சிற்ப