பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4 எண்ணாயிரம் மைல்களுக்கு மேல் சுற்றினேன். சுற்றி எண்ணற்ற தலங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறேன். காஷ்மீர், அஸ்ஸாம் ராஜ்யங்களைத் தவிர மற்ற ராஜ்யங்கள் எல்லாவற்றையுமே சுற்றினேன். புகைப்படங்கள் எடுத்தேன். தலவரலாற்றையெல்லாம் விவரமாகவே தெரிந்துகொண்டேன். ஒன்றே ஒன்று. வடநாட்டில் க்ஷேத்திராடனம் செய் வதைவிட தீர்த்தாடனம் செய்வதே சிறப்புடையது என்று கருதப்படுகிறது. புராணப் பிரசித்தியுடைய கோயில்கள் இல்லாவிட்டாலும், சரித்திரப்பிரசித்தியும் கலைப் பிரசித்தியும் உடைய கோயில்கள் நிறைய இருக்கின்றன. எத்தனையோ கோயில்கள் முகமதியர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருந்தாலும், எஞ்சிநிற்பவையே இந்தியாவின் கலைச்சிறப்பை எடுத்துக்காட்டக் கூடியவை களாக இருக்கின்றன. எங்குபார்த்தாலும் சைவமும் வைணவமும் கலந்து உறவாடிக் கொண்டிருக்கும் சிறப்பைச் சொல்ல முடியாது. சிவலிங்க வழிபாடு சிறந்து விளங்குவது போலவே, கண்ணன், இராமன் முதலிய அவதார மூர்த்தி களின் வரலாற்றோடு தொடர்பு கொண்ட தலங்களும் பல உண்டு. இன்னும் இந்தியாவின் கலைப்பொக்கிஷங்களை அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா குடைவரைகள் என்ன? கஜுராஹோ புவனேஸ்வர், கோனாரக் முதலிய கலைக்கோயில்கள் தாம் எத்தனை எத்தனை? அத்தோடு, பெளத்தமும் சமணமும் உருவாக்கிய கலைக்கோயில்களும் எண்ணிறந்தவை சமய உணர்ச்சி மூலம் தேசிய ஒருமைப்பாட்டை எவ்வாறெல்லாம், நமது முன்னோர்கள் வளர்த்திருக்கிறார்கள் என்றெல்லாம் அறிந்தபோது விம்மிதம் உற்றேன். பெருமிதம் பெற்றேன்.