பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முறையிலே சமணனாயிருந்த ஹொய்சல மன்னன் பிட்டி தேவராயனை வைஷ்ணவனாக்கிய பெருமை, ராமானுஜ ரைச் சாரும், அன்று ஹொய்சலமன்னனாக இருந்த பிட்டி தேவராயன் சமணனாக இருந்திருக்கிறான். ஆனால் அவன் மனைவியோ விஷ்ணு பக்தையாக இருக்கிறாள். இவர்களது ஒரே மகளை ஏதோ ஒரு பேய் பிடித்து ஆட்டுகிறது. இந்தப் பேயை ஒட்ட சமண முனிவர்களை முதலில் அணுகிய, போது அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்த நிலையில் சோழ நாட்டிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்த ராமானுஜரை அழைக்க விரும்புகிறாள் அரசனது மனைவி. அவர் வந்திருக்கிறார். மன்னன் மகள் பூரண தேகசுகம் பெற்றிருக்கிறாள். அவ்வளவுதான் பிட்டிதேவராயன் சமணனாயிருந்தவன் வைஷ்ணவனாகி இருக்கிறான். வைஷ்ணவத்தை தழுவிய இந்த ஹொய்சல மன்னனுக்கு ளிஷ்ணுவர்த்தனன் என்றே புதிய பெயரைச் சூட்டியிருக் கிறார். இப்படி வைஷ்ணவனாக மாறிய ஹொய்சல. மன்னனே. ராமானுஜர் விருப்பப்படி விஷ்ணு கோயில்கள் பல கட்டியிருக்கிறான். அப்படிக் கட்டிய கோயில்களில் எல்லாம் சிறப்புடையது கலைப் பிரசித்தி உடைய கோயில்தான் பேலூரில் உள்ள சென்னக் கேசவர் கோயில். அந்த சென்னக் கேசவர் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று. இக்கோயில் கட்டப்பட்டது 1117 ஆம் ஆண்டு என்று சரித்திர ஏடுகள் பேசுகின்றன. பேலூர் மைசூர் ராஜ்யத்தில் ஹாஸன் ஜில்லாவில் இருக்கிறது. ரயிலில் செல்பவர்கள் மைசூர் அரிசிக்கரை லயனில் ஹாஸன் ஸ்டேஷனில் இறங்கவேண்டும். அங் கிருந்து பஸ்ஸிலோ, காரிலோ 25 மைல் வடமேற்கே சென்றால் பேலூர் வந்து சேரலாம். இல்லை நேரே மைசூரிலிருந்து காரிலேயே செல்வதானால் நூறு மைல் செல்ல வேண்டும். காரிலே சென்றால், சென்னக்கேசவர் கோயில் வாசலிலேயே போய் இறங்கலாம். இக்கோயிலைச் சுற்றி நல்ல மதில் கட்டியிருக்கிறார்கள். இந்த மதில் 445