பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அடி நீளமும் 396-அடி அகலமும் உள்ளது என்றால் கோயில் பிரகாரம் எத்தனை பெரிதாக இருக்க வேண்டும் என்று கற்பனை பண்ணிக் கொள்ளலாம்தானே. இந்தக் கோயிலுக்கு மூன்று வாயில்கள் இருக்கின்றன. தென்புறம் இருப்பது வெள்ளிக் கிழமை வாயில் என்பர். வடபுறம் இருப்பது தெய்வீக வாசல் என்பார். இக் கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கியதுதான். அந்தக் கோயிலே மகாத்வாரம் என்ற பெயரோடு ஒரு உயர்ந்த கோபுரத்தையும் ஏந்தி நிற்கிறது. இந்த கிழக்கு மதில் சுவரிலே இன்னும் ஒரு வாசல் உண்டு. அதனை ஆனே பாசிலு என்கின்றனர். யானை, கோயில் உள்ளே போக அமைந்த வாயிலாக இருக்கும் போலும், இந்த வாயிலி லேயே மன்மதன் ரதி சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. இன்னும் மகாபாரதம் இராமாயணம் முதலிய இதிகாசக் காட்சிகளும் செதுக்கப்பட்டிருக்கின்ற இந்த வாயிலைக் கடந்து வெளிப்பிரகாரத்தில் நுழைந்து அங்கு சென்னக் கேசவரை எதிர்நோக்கி நிற்கும் கருடன்ையும் வணங்கி பின்பே கோயிலுள் செல்ல வேண்டும். இங்குள்ள பிரதான கோயில் 178-அடி நீளமும் 156-அடிஅகலமுள்ள ஒரு உயர்ந்த பீடத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. இருந் தாலும் இந்தப் பீடம் தஞ்சை ஜில்லாவில் உள்ள மாடக் கோயில்கள் போல் மிகவும் உயர்ந்ததாயிராது. இக் கோயிலைக் கட்டிய விஷ்ணுவர்த்தனன், சமணனாக இருந்து ராமானுஜரால் வைஷ்ணவனாக்கப்பட்டவர் என் பதைத் தான் முன்னமேயே அறிந்திருக்கிறோம். இவன் தன் ராஜ்யத்தில் ஐந்து இடங்களில் விஷ்ணுவுக்குக் கோயில்கள் கட்டி அங்கு பஞ்ச நாராயணனைப் பிரதிஷ்டை செய் திருக்கிறார். பேலூரைத் தவிர, தலக்காடு, மேல்கோட்டை தொண்ணு, கடக் என்ற தலங்களிலும் இவன் பிரதிஷ்டை செய்த நாராயணர் இருக்கின்றனர் என்று வரலாறு கூறு கிறது. இந்தக் கோயிலுள் சென்று அங்கு மூல மூர்த்தியாக இருக்கும் சென்னக் கேசவரை வணங்குமுன் கோயிலை ஒரு சுற்றுச்சுற்றி வரவேண்டும், என்று தோன்றும். கோயில்