பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 இந்தக் கேசவனை வணங்கிவிட்டு வெளியே வந்தால் திரும்பவும் கோயிலை ஒரு சுற்று சுற்றவும் சுவரில் உள்ள மதனிகைகளை மறுபடியும் ஒரு முறை கண்டு மகிழவும் நம் மனம் விரும்பும் சரி என்று சுற்றினால், கோயில் பிரகாரத் தில் இன்னும் இரண்டு மூன்று கோயில்கள் இருப்பது தெரி யும். இவைகளில் தென்கிழக்கு மூலையில் இருப்பது கப்பே சென்னகைராயர் கோயில். மேல்பக்கம் இருப்பது வீர நாராயணன் கோயில், ஆண்டாள் கோயில்கள், கப்பே சென்னகராயர் கோயில் இரண்டு கருவறையுடையது. ஒன்றில் சென்னகராயரும் மற்றொன்றில் வேணு கோபாலனும் இருக்கிறார்கள். இந்த கோயிலும் நிறைய சிற்பவடிவங்கள் உண்டு. அவைகளில் சிறப்பாயிருப்பது லக்ஷ்மி, நாராயணன், சரஸ்வதி, விநாயகர், மஹிஷ மர்த்தினி மு த வி ேய ர ர் தாம் சென்னகராயரை பிரதிஷ்டை செய்தவள், விஷ்ணுவர்த்தனது பட்ட மகிஷியாள் சாந்தலதேவி. இப்பட்ட மகிஷியே சிறந்த தொரு சங்கீத விதுவியாகவும், நாட்டியத்தில் வல்லவளா கவும் இருந்திருக்கிறாள் என்று இங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சரிதான் இக்கோயில் ஒரு அரிய கலைக் கோயி லாக விளங்குவதற்கு காரணம் இப்போதல்லவா தெரி கிறது. விஷ்ணுவர்த்தனன் ராமானுஜரால்-விஷ்ணு இடம் அத்யந்த பிரீதி உடையவனாகிறான். அவனது துணைவியோ கலைகளில் வல்லவளாகவும் இருக்கிறாள். இருவரும் சேர்ந்து அமைத்த சென்னக்கேசவர் கோயில் கலைக் கோயிலாக உருவாகாமல் வேறு எப்படி உருவாக முடியும். அப்பே சென்னகராயர் கோயிலுக்கு எதிரிலே யுள்ள ஒரு கல்ஸ்தம்பத்தில் இரண்டு வடிவங்கள் தலையில் பரமபாகவதர்கள் அணியும் குல்லாய் ஒன்று தரித்து முழுங் கால்வரை தொங்கும் அங்கியும் அணிந்து நிற்கிறான் ஆடவன். பக்கத்திலே நிற்கிறாள் ஒரு பெண். இவர்களே விஷ்ணு வர்த்தனனும் அவனது துணைவியும் என்று கருத இடமிருக்கிறது.