பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இக்கோயிலில் தாயார் சந்நிதி இல்லை. பக்கத்திலே உள்ள மலை மேலே தாயார் தனிக்கோயிலில் இருக்கிறாள் என்பர். அந்தத் தாயாரை நாடியே சென்னக்கேசவராயர் நடையால் நடக்கிறார். அதற்கென ஒரு ஜோடி செருப்பு கள் கோயிலில் எப்போதுமே தயாராக இருக்கின்றன. இந்த செருப்பை செய்து தரும் சக்கிலியர்களும் மற்ற ஹரிஜனங்களும் கோயில் பிரகாரத்தில் தாராளமாக வரலாம் என்றும் தீர்மானித்திருக்கின்றனர், பங்குனியில் இக்கோயிலில் உற்சவம் நடக்கிறது. பதினாயிரக் கணக் கான மக்கள் வந்து கூடுகின்றனர். மற்ற நாட்களில் நம்மைப்போன்ற கலா ரசிகர்களைக் காண்பதோடு சென்ன கேசவர் திருப்தி அடைய வேண்டியதுதான். அவர்தான் துணைவியும் இல்லாத தனிக்கட்டையா யிருக்கிறாரே.