பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104
 
11

வேளூர் வைத்தியநாதன்

'மூலிகை மர்மம்' என்று ஒரு புத்தகம். அதில் வேம்பு என்று ஓர் அத்தியாயம். அதில் நம் வீட்டுப் புழக்கடையிலும், ஊர் வெளிப்புறங்களிலும் வளரும் வேப்ப மரத்தின் குணங்களைப் பற்றியே விரிவாகக் கூறப்பட்டிருக்கும். 'முறை சுரங்களுக்கும், இரத்த சுத்திக்கும் வேம்பின் வேர், பட்டை முதலியன கைகண்ட மருந்து. வேப்பமரத்து இலையே வீக்கங்களை வற்ற வைப்பதற்கும், விஷக்கிருமிகளைக் கொல்வதற்கும், விஷ வாயுக்களைத் தடுத்துச் சுகாதாரத்தை உண்டு பண்ணுவதற்கும் ஏற்றது. சுவாச ரணங்களுக்கும், மூளைக்குப் பலம் தருவதற்கும் இரத்தத்திலுள்ள விஷங்களை மாற்றுவதற்கும் வேப்பம் பழம் சிறந்தது.

இதைப் போல் வேப்பம் விதை, வேப்பம் எண்ணெய் எல்லாம் கடுமையான நோய் தீர்க்க வல்லவை. வேப்பம் பூ வடகமும், வேப்பம் பூ ரஸமும் உணவோடு உணவாக வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கக் கூடியவை. நிரம்பச் சொல்வானேன்? வேப்ப மரத்துக் காற்றை உட்கொள்பவர்கள் எல்லாம் நோய் நொடி இல்லாமல் வாழ்வார்கள். அவர்களை விஷ வாயுக்களால் உண்டாகும் வாந்தி பேதி, பிளேக், வைசூரி முதலியவை அண்டாது. வேம்பும் அரசும் சேர்ந்து விட்டாலோ அவற்றைச் சுற்றி