பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

வலம் வரும் பெண்களின் கருப்பையின் கோளாறுகளையெல்லாம் நீக்க வல்லது. இப்படி இன்னும் என்ன என்ன எல்லாமோ விரிவாக வேப்பமரத்தைப்பற்றியும் அதன் கிளை, தளிர், பழம், பட்டை முதலியவற்றைப் பற்றியும் அந்த மூலிகை மர்மத்தில் எழுதியிருந்தது. இந்த மர்மங்களை நமக்கு அந்த நூலாசிரியரான வைத்தியர் விளக்குவதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் தெரிந்து வைத்திருக்கிறார். அது காரணமாக அவர், அந்த வேப்ப மரத்தடியிலேயே கடையை விரித்திருக்கிறார். தம்மை வைத்தியநாதன் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார். தீரா நோய்களைத் தீர்க்கும் வைத்தியராக வாழ்ந்திருக்கிறார். இவரையே, சமயக் குரவர்களில் வயது முதிர்ந்தவரான அப்பர் பெருமான்

பேராயிரம் பரவி வானோர்
ஏத்தும் பெம்மானைப், பிரிவிலா
அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை,
மந்திரமும் தந்திரமும்
மருந்தும் ஆகி
தீரா நோய் தீர்த்து அருள
வல்லான் தன்னைத்திரிபுரங்கள்
தீ எழத் திண் சிலை கைக்கொண்ட
போரானை, புள்ளிருக்கு
வேளூரானைப் போற்றாதே
ஆற்ற நாள் போக்கினேனே

என்று பாடியிருக்கிறார். இந்த வைத்தியநாதன் கோயில் கொண்டிருக்கும் புள்ளிருக்கு வேளூருக்கே செல்கிறோம் இன்று.

சாதாரணமாக, புள்ளிருக்கு வேளூர் என்றால் ஒருவருக்கும் ஊர் எங்கிருக்கிறது என்று தெரியாது. ஆனால்