பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வேங்கடம் முதல் குமரி வரை

வைத்தீசுவரன் கோயில் எங்கிருக்கிறது என்றால் தெரியும். தென் பிராந்திய ரயில்வேயில் மாயூரத்துக்கும் சீகாழிக்கும் இடையில் இருக்கிறது. சீகாழிக்கு அடுத்த தென்பக்கத்து ஸ்டேஷன் என்று ரயில்வே அட்டவணையைப் பார்க்காமலேயே சொல்லி விடுவார்கள். ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் கிழக்கு நோக்கி நடந்தால் தெற்கு ரதவீதியில் கொண்டு வந்து விடும். அதன்பின் ஒரு பிரச்சினன. கோயிலுக்குக் கிழக்கும் மேற்கும் பெரிய கோபுரங்கள் இருக்கின்றனவே, கோயிலுக்குள் எப்படி நுழைய வேணும் என்ற கேள்வி எழும். மேற்கே பார்த்தவராக வைத்தியநாதர் இருப்பதால் மேலக் கோபுர வாயில் வழியாக நுழைந்து மண்டபங்களைக் கடந்து வரலாம். ஆனால் நாம் இந்தக் கோயிலுக்கு வருவது, நமது பழவினையாம் நோய் தீர்க்க மாத்திரம் அல்லவே. உடலில் உறவாடும் நோயையும் தீர்க்கத்தானே. ஆதலால் அன்று அந்த வேம்படியில் கடைவிரித்த வைத்தியாநாதனை அல்லவா முதலில் சந்தித்து, நம் நோய் விவரங்களைக் கூறி அதற்கு மருந்து தேட வேண்டும். ஆதலால் தெற்கு

புள்ளிருக்கு வேளூர்- கோயில்