பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
120
வேங்கடம் முதல் குமரி வரை
 

என்று சுந்தரரிடமே குறை இரந்திருக்கிறார்கள். 'சரி, பெய்யும் மாரியையும் பெருகும் வெள்ளத்தையும் நிறுத்துகிறேன். என்ன தருகிறீர்கள்? இன்னுமொரு பன்னிரண்டு வேலி நிலம் சிவலோகனுக்குத் தருகிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார். சரி, என்று தலையசைத் திருக்கிறார்கள் மக்களும் மன்னனும். பாடியிருக்கிறார் சுந்தரர். மழை நின்றிருக்கிறது. மீட்டும் பன்னிருவேலி கிடைத்திருக்கிறது கோயிலுக்கு. இவ்வளவும் சும்மா கற்பனைக் கதையல்ல, சுந்தரரே சொல்கிறார்:

வையகம் முற்றும் மாமழை
மறந்து, வயலில் நீர்இலை
மாநிலம் தருகோம்
உய்யக்கொள் மற்று எங்களை
என்ன, ஒளிகொள் வெண்முகிலாய்
பரந்து எங்கும்
பெய்யும் மாமழைப்பெருவெள்ளம்
தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு
வேலிகொண்டு அருளும்
செய்கைகண்டு நின் திருவடி
அடைந்தேன், செழும் பொழில்
திருப்புன்கூர் உளானே

என்ற பாட்டை விட இந்த நிகழ்ச்சிக்கு வேறு என்ன சான்று வேண்டும்.

இன்னுமொரு வரலாறு, இக்கோயிலுக்கு இன்னும் நிலம் சேர்ந்ததற்கு. வீரவிக்ரம சோழன் மகனான சிற்சபேச நடேசன் பிறக்கிறான், வளர்கிறான். (இவனை எல்லாம் சரித்திரத்தில் தேடக்கூடாது) அவன் திருப்புன்கூரிலுள்ள தேவதாசி சௌந்தரத்தைத் தன் காதல் கிழத்தியாகக் கொண்டு அவளுடன் வாழ்ந்திருக்கிறான். திருப்புன்கூரை விட்டுத்