பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

125

இத்தகைய பெருமகனைப் பெறுவதற்கு காரணமாகி இருந்தது ஞானசம்பந்தர் தேவாரம். அந்த தேவாரத்தில் சிறப்பாக இருப்பது முக்குளநீர்; அந்த முக்குளம் இருப்பது வெண்காடர் கோயில். அந்த கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்த திருவெண்காடு சீகாழிக்குத் தென் கிழக்கே ஏழு எட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. சிகாழியிலிருந்தும், வைத்தீசுவரன் கோயிலில் இருந்தும் காரிலோ, பஸ்ஸிலோ இல்லை வண்டியிலோ, எளிதாகச் செல்லலாம். அவகாசம் இருந்தால், செல்லும் வழியிலிருந்து கொஞ்சம் விலகி விலகிச் சென்று, திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருஆலித் திரு நகரையும் திரு நாங்கூர்த் திருப்பதிகளையும் அங்குள்ள பெருமாள், ஆழ்வார்களையும் தரிசித்து விட்டுச்

வெண்காடு மேல வாசல்

செல்லலாம். இந்தத் திருவெண்காடு முத்திநகர், ஞானவனம், ஆதி சிதம்பரம், பேரரங்கம், தருமகோடி என்றும் இன்னும் எண்ணற்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தது அந்த நாளில், என்று தலவரலாறு கூறும். இங்குள்ள சுவேதவன ஈசுவரர் கோயிலுக்கு மேல வாயில் வழியாகவும் செல்லலாம். கீழ வாயில் வழியாகவும் செல்லலாம். இரண்டு வாயிலும் எப்போதும் திறந்தே இருக்கும்.