பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
130
வேங்கடம் முதல் குமரி வரை
 

தூண்டு சுடர்மேனித் தூநீறு ஆடி, சூலம்கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து,
பொற் சடைகள் அவைதாழப்புரிவெண்நூலர்
நீண்டு கிடந்து இலங்கு திங்கள்சூடி
நெடுந்தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார் வேண்டுநடை நடக்கும் வெள்ளேறு ஏறி
வெண்காடு மேவிய விகிர்தனாரே

என்பது அப்பர் தேவாரம். சுந்தரருக்கோ இந்த வெண்காடரைக் கண்டதும் சந்தேகத்தின் பேரில் சந்தேகம் எழுந்திருக்கிறது. ஆதலால் கேள்விமேல் கேள்வியாகப் போட்டுத் தள்ளி விட்டார். ‘விடங்கராகித் திரிவதென்னே? விடை ஏறித் திரிவதென்னே? விண்ணுளீராய் நிற்பதென்னே? விடம் மிடற்றில் வைத்ததென்ன?' என்பது அவர் கேட்ட கேள்விகளில் சில. இத்தனை கேள்விகளுக்கும் விடை பெறாமலா திரும்பியிருப்பார்? ‘விருந்தினனாகி வெண்காடு அதனில் குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையை' விளக்கினார் மணிவாசகர். பின்னர் பட்டினத்தார் என்று பெயர் பெற்ற வெண்காடர் இத்தலத்துக்கு வந்து சிவ பூஜை செய்யும் பேறுபெற்றார் என்பது வரலாறு.

இக்கோயிலின் சரித்திர ஏடுகளைப் புரட்டினால் இன்னும் என்ன என்ன தகவல்கள் எல்லாமோ கிடைக்கும். இக்கோயிலில் சுமார் எண்பது கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ராஜராஜன், கங்கை கொண்ட சோழன், ராஜாதி ராஜன், முதற் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் முதலிய சோழ மன்னர்கள், சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன், விக்கிரம பாண்டியன் முதலிய பாண்டிய கல்வெட்டுக்களில் ஒரு கல்வெட்டில் 'வடகரை நாங்கூர் நாட்டு, நாங்கூர் ஸ்ரீ திருவெண்காடு உடைய தேவர் ஆலயம்' என்று இக்கோயில் குறிக்கப்