பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

131

பட்டிருக்கிறது. இந்த நாடு ராஜாதிராஜ வள நாடென்று பெயர் பெற்றிருக்கிறது. சில கல்வெட்டுக்கள் ஆடவல்லார், பிச்சதேவர், இடபவாகன தேவர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்ததை அறிவிக்கின்றன. சில கல்வெட்டுகளிலிருந்து வளத்து வாழவிட்டான் சந்தி, குலசேகரர், தொண்டைமான் சந்தி முதலிய கட்டளைகளின் பெயர்கள் புலப்படுகின்றன. ஆடரங்கம், ஆரியக் கூத்து நடந்ததை யெல்லாம் இக்கல்வெட்டுக்கள் கூறும். இன்னும் எண்ணிறந்த தகவல்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்க்குக் கிடைக்கும்.

இத்தலத்துக்குச் சென்று முக்குள நீர் தோய்ந்தால் தோயாது தீவினைகள் என்பர் சம்பந்தர், ஆனால் அப்பரோ 'வெண்காடே, வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டலாமே' என்றே கூறியிருக்கிறார். நாம் அப்பரோடு சேர்ந்து 'வெண்காடா!' என்று கூவி அழைத்து நம் வல்வினைகளை நீக்கி வீடு திரும்பலாம்.