பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

143

அப்போதும் விடுகிறானில்லை காலன், இறைவனுக்கோ காலன் பேரிலேயே கடுங்கோபம். 'எந்த நியதிக்கும் விதி விலக்கு என்பது கிடையாதா? என்னையே கட்டிப் பிடித்திருக்கிற நேரத்திலுமா இவன் தன் கடமை தவறாது அவன் உயிர் கவர வரவேணும்?' என்று எண்ணுகிறான். லிங்கத்திலிருந்தே கிளம்பி எழுந்து காலனை எட்டி உதைத்து விலக்குகிறான்; சூலத்தையே பாய்ச்சுகிறான். மார்கண்டன் என்றும் பதினாறு வயதுடன் நித்யத்வம் பெற்றுச் சிரஞ்சீவியாய் வாழ்கிறான். இப்படி இறைவன் காலனைக் காய்ந்த வரலாற்றைச் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாத்திரம் அல்ல, திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதியுமே பாடியிருக்கிறார்.

கொன்றாய் காலனை, உயிர்கொடுத்தாய்
மறையோனுக்கு, மான்
கன்றாருங் காவாக் கடவூர்
திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான்
எனக்கு யார்துணை நீயலதே?

என்பதுதான் சுந்தரர் பாடிய பாட்டு. இப்படி மார்கண்டனுக்கு அருள் செய்யக் காலனைக் காய்ந்த கால சம்ஹாரர் பிரதான மூர்த்தியாக விளங்கும் தலம் தான் திருக்கடவூர். இன்றும் நீண்ட வாழ்வைப் பெற விரும்புபவர்கள் சென்று ஆயுஷ் ஹோமம் எல்லாம் செய்யும் இடமும் இதுதான். இந்தத் திருக்கடவூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்தத் திருக்கடவூர் தஞ்சை ஜில்லாவிலே மாயூரம் தாலூகாவிலே இருக்கிறது. மாயூரம் தரங்கம்பாடி ரயில்ப் பாதையிலே சென்று 'திருக்கடையூர்' என்னும் ஸ்டேஷனில் இறங்கி இரண்டு பர்லாங்கு கிழக்கு நோக்கி நடந்தால் போதும். இல்லை, இன்னும் கொஞ்சம் விரைவாகவே