பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
150
 
வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf

இக்கோயிலுக்குப் போனதுதான் போனோம், இந்த வீரட்டானர் கோயிலுக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்திலேயுள்ள கடவூர் மயானம் என்னும் தலத்துக்கும் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் பெரிய பெருமான் அடிகள், மலர்க்குழல் மின்னம்மை இவர்களையும் வணங்கிவிட்டே திரும்பலாம். சிவபெருமான் ஒரு கல்பத்தில் பிரமதேவரை நீறாக்கி அவரை மீளவும் உயிர்ப்பித்து படைப்புத் தொழிலை நிகழ்த்திய இடம் ஆனதால் மயானம் என்று பெயர் பெற்றது என்பர். இறப்பும் பிறப்பும் மயானத்திலேயே நடந்திருக்கிறது. நமது பழவினைகளை எரித்து நம்மையும் உய்யக் கொள்ளும் இறைவன் திருவிளையாடல்கள் புரிய எந்த இடம் என்று உண்டா ?