பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

16

ஆக்கூர் ஆயிரத்து ஒருவர்

ளவெண்பாப் பாடிய புலவர் புகழேந்தி என்பவர். இவரை ஆதரித்த சிற்றரசனோ சந்திரன் சுவர்க்கி. தன்னை ஆதரித்தவரை மறவாது, நானூறு பாடல்களே உடைய நளவெண்பாவில் நான்கு இடங்களில் பாராட்டுகிறார் புகழேந்தி, கவிச்சக்கரவர்த்தி கம்பனை ஆதரித்துப் போற்றியவர் வெண்ணெய் நல்லூர் சடையப்பர். பதினாயிரம் பாடல்கள் கொண்ட இராம கதையிலே கம்பன் இவரைப் பத்து இடங்களிலேதான் பாராட்டுகிறான். இந்தத் தகவலைச் சொல்லிக் கம்பனிடம் ஒரு தமிழ் அன்பர் கேட்கிறார்: 'கவிஞரே! நானூறு பாட்டில் அவர் நான்கு இடங்களில் சந்திரன் சுவர்க்கியைப் புகழ, நீர் பத்தாயிரம் பாடல்களில் பத்துத் தரம் தானே பாராட்டுகிறீர்; இதுதானா உமது நன்றி அறிதல்?' என்று. இந்தக் கேள்விக்குப்பதில் சொல்லக் கம்பன் சளைக்கவில்லை. 'உண்மைதான்! புகழேந்தி சந்திரன் சுவர்க்கியை நூற்றுவரில் ஒருவராக மதிக்கிறார். நானோ வள்ளல் சடையப்பரை ஆயிரத்தில் ஒருவராக மதிக்கிறேன்' என்பதுதான் அவனது பதில். இப்படி ஒரு வரலாறு கர்ண பரம்பரையில். வள்ளல் சடையப்பருக்கு ஆயிரத்தில் ஒருவர் என்ற பெயர் நிலைத்ததோ இல்லையோ? அறியோம். ஆக்கூரில் உள்ள